"2 நிமிஷ ஆசை.. அதை அடக்க முடியாதா".. கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சர்ச்சை கருத்து!

Oct 20, 2023,01:34 PM IST

கொல்கத்தா: பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற பெஞ்ச், பெண்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை எழுப்பியுள்ளன.


கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு இளைஞர் அப்பீல் மனு செய்திருந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கு அது. அந்த மனுவை நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஸ், பார்த்தா சாரதி சென் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் செஷன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.




விசாரணையின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில அறிவுரைகளை நீதிபதிகள் கூறினர். அவர்கள் கூறியதாவது:


இளம் வயதில் செக்ஸ் உறவுகள் தொடர்பாக எழும் சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க பள்ளிகளில் செக்ஸ் கல்வியை விரிவாக நடத்த வேண்டும்.


வளர் இளம் வயதில் செக்ஸ் என்பது இயல்பானதுதான்.  ஆனால் செக்ஸ் உணர்வுகள் எழுவதை கட்டுப்படுத்த வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் நடந்து கொள்வதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.


பெண்கள் தங்களது செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்திற்காக அதை கட்டுப்படுத்தாமல் இருக்கக் கூடாது. சமூகத்தின் பார்வையில் பெண்களைத்தான் குறை சொல்வார்கள். இதைத் தவிர்க்க, அந்த இரண்டு நிமிடத்தில் ஏற்படக் கூடிய சந்தோஷத்தை மனதில் கொண்டு உங்களை இழந்து விடக் கூடாது.


தங்களது உடம்பையும், கண்ணியத்தையும், சுய மதிப்பையும் பெண்கள்தான் பாதுகாக்க வேண்டும். அதன் மீதான உரிமையை விட்டுக் கொடுத்து விடக் கூடாது.


பெண்களின் கண்ணியத்தை ஆண்கள் மதிக்க வேண்டும். பெண்களை மதிக்கும் வகையில் தங்களது மனங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் சுய மதிப்பு, அவரது உடல் மீதான உரிமை, தனிப்பட்ட அந்தரங்கம் ஆகியவற்றை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


நீதிபதிகளின் கருத்துக்கள்  தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்