சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நடிகர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் முன்னாள் அரசியல்வாதி ஆவார். தற்போது விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருபவர் இவர்தான். புஸ்ஸி ஆனந்த் தலைமையில்தான் தற்போது விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு, பணிகள் சீராக முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியலுக்கு விஜய் வரும்போது இந்த இயக்கம் அப்படியே கட்சி அமைப்பாக மாறும் அளவுக்கு பணிகளை செய்து வருகிறார் புஸ்ஸி ஆனந்த்.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆலோசனைகள் நடத்துகிறார். சமீபத்தில் லியோ பட வெற்றி விழா நடைபெற்றது. அதிலும் தீவிரமாக பங்கேற்றிருந்தார் புஸ்ஸி ஆனந்த். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல் அசவுகரியம் ஏற்பட்டது. உடனடியாக அவரை குளோபல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்தனர்.
அதீத உடல் சோர்வு காரணமாகவே உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது புஸ்ஸி ஆனந்த் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் நடிகர் விஜய் விரைந்து சென்று ஆனந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}