த.வெ.க. வேற மாதிரி.. எந்தப் பதவியும் நிரந்தரமல்ல.. உழைப்புக்கே மரியாதை.. புஸ்ஸி ஆனந்த்

Oct 18, 2024,12:36 PM IST

சென்னை:   சேலம், அம்மன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. அப்போது பேசிய கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெகவில் எந்தப் பதவியும் நிரந்தரமானது அல்ல. இங்கு உழைப்புக்கு மட்டுமே கெளரவம் கிடைக்கும் என்றார்.


நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டு அரசியல் பயிலரங்கள் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு பற்றிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். 




அதன்படி, இன்று சேலம், அம்மன்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. மாநாட்டு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்து வருகிறது. தவெகவில் பதவி நிரந்தரமானது அல்ல. எதிர்பார்க்காமல் உழைப்பவர்களுக்கு தவெகவில் அங்கீகாரம் கிடைக்கும்.அப்பா அம்மா கால்ல மட்டும் தான் நீங்க விழணும்... இனி வரும் காலங்களில் வேற யாரோட காலிலும் நீங்க விழக்கூடாது.


நம்மளுடைய உயிர் மூச்சு எல்லாம் நம்முடைய தளபதி தான். நம்மளுக்கு அரசியல் தெரியுமானு தான் எல்லாரும் கேக்குறாங்க. நம்மல பாத்து தான் மத்தவங்க அரசியலை கத்துக்கனும். அப்படி தான் நம்முடைய தளபதி வளர்ந்துள்ளார். மத்தவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி கூட்டம் கூட்டனும்னா 2 மாசம் ஆகும். நமக்கு அப்படி இல்ல. நமக்கு தலைவன் ஒரு பேர சொன்னாலே போதும். நம்முடைய உயிர், மூச்சு எல்லாமே தளபதி தான் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்