முதலில் குடும்பத்தை பாருங்க.. பிறகு தொழில்.. அதன் பிறகுதான் சேவை செய்ய வேண்டும்.. புஸ்ஸி ஆனந்த்

Sep 30, 2024,01:33 PM IST

தஞ்சாவூர்:   முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும், பிறகு தொழிலை பார்க்க வேண்டும். அதல் வரும் வருமானத்தில் இருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும் என்று கூறுபவர் தான் நம் தலைவர் தளபதி என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் நான்சி மஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் அழைப்பிதழ் கொடுத்து தொண்டர்களை வரவேற்றார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். 


அப்போது,  அவர் பேசுகையில் கூறியதாவது:




முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழிலை பார்க்க வேண்டும். அதில் வரும் வருமானத்திலிருந்து ஒரு சதவீதமோ இரண்டு சதவீதமோ சேவை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன். 


நம் நிர்வாகி ஒருவர் எனக்கு லீவு வேணும் முதலாளி என கேட்கும்போது 26, 27 எவ்வளவு முக்கியமான நாள் நீ லீவு கேட்கிறாயே என முதலாளி கூற, முதலாளி நான் உன்கிட்ட 18 வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு நாள் லீவு கொடுத்து விடு, அப்படின்னு கேட்டதற்கு அப்படி நீ லீவ் எடுத்தா உனக்கு போனஸ் கிடையாது. வேலையை விட்டு எடுத்து விடுவேன் எனக் கூறிய முதலாளியிடம் நீ வேலையை விட்டு எடுத்தால் என்ன? போனஸ் கொடுக்கலைனா என்ன? தலைவன் தளபதியை நான் பார்க்க வேண்டும் உன் வேலையும் வேண்டாம் எதுவும் வேண்டாம் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு உண்மையான தொண்டன் இருக்கிறான் என்றால் அது நமது தமிழக வெற்றிக் கழகத் தொண்டன் தான் என்றார் புஸ்ஸி ஆனந்த்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்