சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி 2 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்ட்பபடவில்லை.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அந்த ஆலோசனைக்குப் பின்னர் மீண்டும் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது. இன்று இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையும் தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகையில், எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. எல்லாவற்றையும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம், பேசிக் கொள்ளலாம் என்று மட்டுமே அவர்கள் தெரிவித்தனர். எங்களது ஊதிய உயர்வு கோரிக்கையை கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மட்டுமாவது ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு அதையும் ஏற்க முன்வரவில்லை. எதைக் கேட்டாலும் பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று மட்டுமே கூறினர்.
இதனால் எங்களுக்கு திட்டமிட்டபடி ஸ்டிரைக்கைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்று மாலை வரை கூட அவகாசம் இல்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும், பரிசீலிக்க வேண்டும். எங்களுக்கு மக்களை சிரமப்படுத்துவதில் உடன்பாடு இல்லை. ஆனால் அரசுதான் அந்த நிலைக்கு எங்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் கூறினர்.
நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சிவசங்கர்
இந்த நிலையில் நாளை வழக்கம் போல பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுகவின், தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை பணியில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஆறு கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. மற்ற கோரிக்கைகளை பொங்கலுக்குப் பிறகு பார்க்கலாம் என்று கூறினோம். அதை தொமுச ஏற்றுக் கொண்டுள்ளது என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}