திருப்பத்தூரில் +2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுநர் சஸ்பெண்ட்

Mar 25, 2025,05:38 PM IST

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில்,  பிளஸ் மாணவி பேருந்திற்காக நின்றிருந்தார். அப்போது,  அங்கே வந்த 1சி என்ற அரசு பேருந்து,  நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. அங்கே காத்திருந்த பிளஸ் டூ மாணவி, பிளஸ் டூ தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி பேருந்தை பின் தொடர்ந்து சற்று தூரம் ஓடியுள்ளார். மாணவி பின் தொடர்வதை பார்த்த ஓட்டுனர் சிறிது தூரத்திலலேயே பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிக் கொண்டார்.




இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.  இந்த நிலையில், தேர்வு எழுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பஸ் ஓட்டுநர் முனிராஜ் தற்போது சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 


இந்த பேருந்துதை ஓட்டிய முனிராஜ் மற்றும் நடத்துனர் அசோக்குமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பேருந்தை இயக்கியதே காலதாமதமாக இயக்கியதால், நேரம் இல்லாத காரணத்தினால் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறியுள்ளனர். இதனால், ஒட்டுனர் மற்றும் நடத்துரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உடனே பேருந்தில் இருந்து இறக்கியதாகவும், மாற்று ஓட்டுநர் மற்றும் இயக்குனரை நியமித்ததாகவும் கிளை மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்