டெல்லி:2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.
2025- 26 ஆம் நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வு மார்ச் 10 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்கும் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து நாளை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலை அடுத்து முழு பட்ஜெட்டை ஏழாவது முறையாக தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதம் பிப்ரவரி 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 6ஆம் தேதி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் , கிரண் ரிஜிஜு, ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோரின் தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகள், நடப்பு ஆண்டு நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள், யு சி ஜி வரைவுக் கொள்கை, வக்புவாரிய திருத்தச் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி இருப்பதாக திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு உரையுடன் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், யூசிஜி வரைவு கொள்கை, வகுப்பு வாரிய திருத்தச் சட்டம், உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
{{comments.comment}}