டில்லி : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்பிற்கு இடையே மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசித்து வருகிறார் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக அரசின் சாதனை பட்டிலுடன் தன்னுடைய பட்ஜெட் உரையை அவர் துவக்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரை துவங்கியதுமே கடும் அமளியில் ஈடுபட துவங்கினர்.
பணவீக்கம், வேலையின்மை, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, அதற்கு பதிலளித்த பிறகு பட்ஜெட் துறையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூச்சலிட துவங்கின.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய பட்ஜெட் உரையை துவங்கி, வாசிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.
மாற்றத்திற்கான பட்ஜெட் தாக்கலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தெலுங்குக் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி தற்போது வாசித்து வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மத்திய பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டமும் சொல்லலியே அமைச்சர் நிர்மலா.. மக்கள் ஏமாற்றம்!
Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.. அதிரடி அறிவிப்பு
Budget 2025: ஹீல் இந்தியா, பீகாருக்கான திட்டங்கள், ஐஐடி மேம்பாடு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் சோகம்.. அடுத்தடுத்து விமான விபத்து.. குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்
Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்
சீட் கிடைக்காத கோபம்.. 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலி
பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரெடி... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயார்... இன்று என்ன நடக்கும் ?
Budget 2025: பட்ஜெட் நாளில் ரூ.7 குறைக்கப்பட்ட கமர்ஷியல் சிலிண்டர் விலை
{{comments.comment}}