Budget 2025: ஹீல் இந்தியா, பீகாருக்கான திட்டங்கள், ஐஐடி மேம்பாடு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

Feb 01, 2025,12:54 PM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.


- அசாமில் யூரியா தொழிற்சாலை 

- கிராமப்புறங்களில் இளைஞர்கள் விவசாயிகள் பெண்கள் பயன்பெறும் புதிய மேம்பாட்டு திட்டம்

- சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதம் 20 கோடியாக அதிகரிப்பு

- பட்டியல் இன பெண்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு கோடி கடன் உதவி 

- உலக அளவில் பொம்மை உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற புதிய திட்டம்

- தோல் மற்றும் காலணி தயாரிப்பில் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

- மூடப்பட்டுள்ள மூன்று யூரியா தொழிற்சாலைகள் திறக்கப்படும்

- ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உரம் உற்பத்தி செய்ய இலக்கு

- பீகார் மாநிலத்தில் உணவு பதப்படுத்தலுக்கான தேசிய நிறுவனம் அமைக்கப்படும்

- அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும்


வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு




வருமான வரி விலக்கு பெறுவதற்கான வெளிநாடு வருமானத்திற்கான உச்சவரம்பு ரூபாய் 7 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  வீட்டு வாடகைக்கான வரி கழிவு (TDS) ரூ 2.40 லட்சத்திலிருந்து ரூபாய் ஆறு லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்களுக்கான வட்டி வருவாயில் ரூபாய் ஒரு லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

 

பதப்படுத்தப்பட்ட மீன்களின் ஏற்றுமதிக்கான வரி 40 சதவீதத்தில் ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிக்கான சுங்கவரி முற்றிலும் செய்யப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செல்போன்,டிவி, கணினி, உள்ளிட்ட எல் ஐ டி திரைக்கான சுங்கவரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் லித்தியம் பேட்டரிக்கான சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள முக்கியமான 50 சுற்றுலா தளங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புற்று நோய்க்கான உயிர் காக்கும் 36 மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.


மாநிலங்களில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த ரூபாய் 1.5 லட்சம் கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும். சுற்றுலாத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


காப்பீட்டு துறையில்  74 சதவீதம் நேரடியாக அந்நிய முதலீடு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது நேரடி அந்நிய முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.


மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த ஹீல் இந்தியா என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வருமான வரிக்கு புதிய சட்ட மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். கடந்த பத்து ஆண்டுகளில் வரி செலுத்துவோருக்கு உதவ பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


அடுத்த 10 ஆண்டுகளில் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே 50 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு குறைந்த விலையில்  40,000 வீடுகள் கட்டித் தரப்படும்.


2033 போல் புதிதாக ஐந்து அணு உலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 2027க்குள் நூறு ஜிகாவாட் மின் உற்பத்தி மற்றும் அணு உலைகள் மூலம் நடைபெறும். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மேலும் 40 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.


பீகார் மாநிலத்துக்கு சூப்பர் திட்டங்கள்




சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ள பீகாரருக்கு சூப்பர் திட்டங்கள்.  தாமரை விதைகள் உற்பத்தி செய்வதற்காக வாரியம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல்  பாட்னா விமான நிலையத்தை மேம்படுத்துவதுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. தேசிய உணவு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஒன்றும் பீகாரில் அமைக்கப்படும்.


உணவு டெலிவரி உள்ளிட்ட அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் உருவாக்கப்படும்.  நாடு முழுவதும் 23 ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6500 மாணவர்கள் பயன்  பெறுவார்கள்.


தொழில்நுட்ப மையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மூன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையங்கள் அமைக்க ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


விவசாயிகளுக்கான கிரெடிட் கார்ட் கடனுக்கான உச்சவரம்பு ரூபாய் 3 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சம் ஆக உயர்வு அளிக்கப்படும். இதில் விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் ரூபாய் 3000  இருந்து ரூபாய் 5000 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது.


தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். அஞ்சல் துறை மூலம் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சிறு குறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையில் 5 லட்சம் வரை கடன் பெற புதிய கிரெடிட் கார்டுகள்  வழங்கப்பட உள்ளது. கிராமப்புறங்களில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், பயன் பெறும் வகையில் புதிய மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


பருத்தி சாகுபடி அதிகரிக்க ஐந்தாண்டு செயல்படுத்தப்படும். அதாவது அதிக விளைச்சல் தரும் பருத்தி விதைகள் உற்பத்தி செய்ய தேசிய அளவில் திட்டம் செயல்படுத்தப்படும்.


பத்து அம்சங்களை கருத்தில் கொண்டு உருவாக்கியுள்ள பட்ஜெட்டில் தரமான கல்வி, வறுமை ஒழிப்பு, வாழ்க்கைத் தரம் மேம்பாடு, ஒருங்கிணைத்த சுகாதாரம் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


1.70 கோடி விவசாயிகள் பயன் பெறும் வகையில் 100 மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.



பட்ஜெட் 2025-26 - முழு விவரம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்



சமீபத்திய செய்திகள்

news

மதுபானி கலை பாணியிலான சேலை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

மத்திய பட்ஜெட் 2025 : தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டமும் சொல்லலியே அமைச்சர் நிர்மலா.. மக்கள் ஏமாற்றம்!

news

Budget 2025: ரூ.12 லட்சம் வரை வருமான பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.. அதிரடி அறிவிப்பு

news

Budget 2025: ஹீல் இந்தியா, பீகாருக்கான திட்டங்கள், ஐஐடி மேம்பாடு.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

news

அமெரிக்காவில் சோகம்.. அடுத்தடுத்து விமான விபத்து.. குடியிருப்பின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!

news

Budget 2025: 100 புதிய விமான நிலையங்கள்.. ஹீல் இந்தியா திட்டம்.. முக்கிய அறிவிப்புகள்

news

Budget 2025: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்புக்கு இடையே தாக்கலானது மத்திய பட்ஜெட்

news

சீட் கிடைக்காத கோபம்.. 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலி

news

பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரெடி... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயார்... இன்று என்ன நடக்கும் ?

அதிகம் பார்க்கும் செய்திகள்