லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் எதிர்கால அரசியல் வாரிசாக கருதப்படும் அவரது உறவினரும், மருமகனுமான ஆகாஷ் ஆனந்த், பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் கடுப்பான உ.பி. பாஜக அரசு தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைத்துள்ளார் மாயாவதி. ஆகாஷ் ஆனந்த்துக்கு முழு பக்குவம் வந்ததும் மீண்டும் அரசியிலில் ஈடுபடலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.
ஒரு காலத்தில் உ.பியை கட்டி ஆண்டவர் மாயாவதி. ஆனால் இவர் மீது பின்னர் ஏகப்பட்ட வழக்குகள் குவிந்தன. இதனால் இவரே தனது பலத்தைக் குறைத்துக் கொண்டு அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். யாருடனும் கூட்டணி சேருவதில்லை. தனித்துதான் போட்டியிடுவார். இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கி குறைந்து போய் அது பாஜக பக்கம் மாறி விட்டது. இவரிடம் உள்ள வாக்கு வங்கியானது, பாஜகவுக்குத்தான் முழுமையாக உதவி வருகிறது. வழக்குகள், விசாரணைகள், சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பயந்து தற்போது தீவிரமாக அரசியல் செய்வதில்லை மாயாவதி.
இந்த நிலையில், மாயாவதியின் அடுத்த வாரிசாக அறியப்படுபவர் அவரது உறவினரான ஆகாஷ் ஆனந்த். இவர் கடந்த வாரம் தலிபானுடன் பாஜகவை ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த அரசு புல்டோசர் அரசு, துரோகிகள் நிறைந்த அரசு. இளைஞர்களை பட்டினி போட்டு விட்டு, மூத்தவர்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாத அரசு என்று கடுமையாக தாக்கிப் பேசியிருந்தார் ஆகாஷ் ஆனந்த். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது உடனடியாக உ.பி. போலீஸார் தேர்தல் விதி மீறல் வழக்கைப் பதிவு செய்தனர்.
பாஜக தரப்பு கோபமாகி விட்டதை உணர்ந்த மாயாவதி தற்போது பிரச்சினையை சரி செய்ய களம் இறங்கியுள்ளார். தற்போது ஆகாஷ் ஆனந்த் வகித்து வரும் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து அவரை விலக்கி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல அவர் அரசியல் வாரிசும் இல்லை என்று அறிவித்துள்ளார். முழுப் பக்குவம் வரும் வரையில் கட்சிப் பணிகளில் ஆகாஷ் ஈடுபட மாட்டார் என்றும் அந்தப் பொறுப்புகளை ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார் பார்த்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார் மாயாவதி. ஆகாஷ் ஆனந்த்துக்கு, மாயாவதி, அத்தை முறை வரும். அதாவது ஆனந்த் குமார், மாயாவதியின் சொந்தத் தம்பி ஆவார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை அறிவித்தார் மாயாவதி. ஆனால் தற்போது அவருக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலின்போதுதான் அரசியலுக்கு வந்தார் ஆகாஷ் ஆனந்த். அதற்கு முன்பு வரை அவ்வப்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வார், மாயாவதியுடன் துணைக்கு வந்து சென்றார். அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த், பாஜகவின் கோபத்தை சம்பாதித்திருப்பது மாயாவதியை அதிர வைத்துள்ளதாம்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}