அச்சச்சோ.. அந்த யானை.. அது எங்க யானை.. பஞ்சாயத்தைக் கிளப்பும் பகுஜன் சமாஜ் கட்சி!

Aug 22, 2024,06:53 PM IST

சென்னை: தவெக  கட்சிக் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பித்தார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என்று கூறினார். அதன்பின்னர் கட்சியின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் விஜய். உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக செய்து வந்தார் விஜய்.




இந்நிலையில், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியினை இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தாய், தந்தை உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கட்சி கொடியில் மேலும் கீழும் சிவப்பும் நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளது. இந்த  கொடியில் இரண்டு யானைகளுக்கு நடுவில்  பச்சை நிறத்தில் 23 நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நட்சத்திரங்களுக்கு அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அமையப்பெற்றுள்ளது. 


விஜய் என்றால் வெற்றி. அதேபோல் வாகை என்றாலும் வெற்றி. எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி  என்பது உறுதி  என்பதைக் குறிக்கவே இக்கட்சி கொடியின் நடுவில் வாகை பூ இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டும் வந்தது. விஜய் வெளியிட்ட கட்சிக் கொடி மற்றும் பாடலுக்கு அனைத்து தரப்பினர் ஆதவு தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்ட கட்சிக் கொடியில் யானை சின்னம் இருப்பதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை  பயன்படுத்துவது தேர்தல் விதிகளின் படி தவறானது எனவும், விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், உடன்படாத பட்சத்தில் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியனர் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே, யானைச் சின்னமானது கேரள அரசின் இலச்சினையைக் குறிப்பது போல உள்ளதாகவும், பெவிக்கால் விளம்பரத்தில் வருவது போல உள்ளதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துப் பேசி வருகின்றனர். யானைச் சின்னம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபனை தெரிவித்திருப்பதால் கொடி டிசைன் மாறுமா அல்லது இதை சட்டப்படி விஜய் சந்திப்பாரா என்று தெரியவில்லை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்