சென்னை: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் குஷியாகி உள்ளனர்.
நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் ஆகியவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் ஜியோ நாட்டிலேயே நம்பர் ஒன் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அடுத்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படவுள்ளது எனவும், இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஜியோ, வோடபோன், ஏர்டெல், நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன கட்டண உயர்வு நாளை முதல் அமல் வர உள்ளன. வோடபோன் நிறுவனத்தின் கட்டண உயர்வு ஜூலை 4 முதல் அமலுக்கு வர உள்ளன.
இதற்கிடையே அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ, வோடபோன், நிறுவனங்களை விட குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இது மக்களுக்கு குஷியைக் கொடுத்துள்ளது.
45 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் ரூபாய் 249 கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க் நிறுவனத்திற்கும் இலவச அன்லிமிடெட் மொபைல் நெட்வொர்க் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா பயன்படுத்தும் விதமாக 90 ஜிபி டேட்டாவும் நாளொன்றுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதியையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
{{comments.comment}}