தேர்தல் காலத்தில்.. மோடிக்கு முன்பாக "ஈடி"யை அனுப்பும் பாஜக.. கவிதா தாக்கு

Mar 10, 2023,12:22 PM IST

ஹைதராபாத்: தேர்தல் வரும் மாநிலங்களில் எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒடுக்க "ஈடி"யை (அமலாக்கப் பிரிவு) அனுப்பி விடுகிறது பாஜக.. இதுதான் அவர்கள் கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தும் நடைமுறை.. ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா.


டெல்லி சுங்கவரி திட்ட மோசடி வழக்கில் கவிதாவின்  பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வருமாறு டெல்லி அமலாக்கப் பிரிவு கவிதாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் தான் ஆஜராகவிருப்பதாக கவிதா தெரிவித்துள்ளார்.



அமலாக்கப் பிரிவு சம்மன் குறித்து அவர் கூறுகையில், இந்த  சம்மனைக் கண்டு நான் பயப்படவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.  பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் அக்கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவு, சிபிஐ போன்றவற்றைப் பயன்படுத்துவதுதான் பாஜகவின் ஸ்டைல்.


அதிலும் தேர்தல் நடைபெறப் போகும் மாநிலங்களில் அங்குள்ள  பலமான கட்சிகளை ஒடுக்க அமலாக்கப் பிரிவை ஏவி விடுகிறது பாஜக. பிரச்சாரத்திற்கு மோடி வருவதற்கு முன்பாகவே அந்த மாநிலங்களுக்கு ஈடி வந்து விடுகிறது.  தனது சித்தாந்தத்திற்கு ஒத்துவராத அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஒடுக்க ஈடியைத்தான் பயன்படுத்துகிறது பாஜக என்று குற்றம் சாட்டினார் அவர்.


கவிதா தற்போது எம்எல்சியாக உள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் - டிசம்பர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அங்கு டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்   இடையே கடும் மோதலும் நிலவுகிறது. அவ்வப்போது இரு கட்சியினருக்கும் இடையே அடிதடிகளும் நடைபெறுகிறது. டிஆர்எஸ் கட்சித் தலைவர்கள் பலர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குகளும் கிளம்பி வருகின்றன. இந்த நிலையில்தான் கவிதா ரூபத்தில் கே.சி.ஆருக்கு செக் வைக்கப்படவுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்