2வது கட்ட மக்களவைத் தேர்தல்.. 88 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு.. மக்கள் ஆர்வம்!

Apr 26, 2024,09:16 AM IST

டெல்லி: நாடு முழுவதும் இன்று 2வது  கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 88 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் இன்று 2வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.


இன்றைய தேர்தலில் மொத்தம் 15.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களுக்காக 1.67 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34.8 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். மேலும் இன்றைய தேர்தலில் வாக்களிக்கவுள்ள 3.28 கோடி வாக்காளர்கள் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்து. மொத்தம் 1202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1098 பேர், பெண்கள் 102 பேர் ஆவர்.


கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.


ஆலப்புழையில் ஓட்டுப் போட்ட கே.சி. வேணுகோபால்




காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆலப்புழையில் வாக்களித்தார். இவர் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் தொகுதியில் போட்டியிடும் முனானாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், தனது மனைவியுடன் காலையிலேயே ஜோத்பூர் வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


தாய்மாமாவுடன் வந்து வாக்களித்த நிர்மலா சீதாராமன்




மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலம் பெங்களூரு பிஇஎஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.  அவருடன் அவரது தாய்மாமாவும் வந்து வாக்களித்தார். 


லோக்சபா சபாநாயகரும், கோட்டா தொகுதி பாஜக வேட்பாளருமான ஓம் பிர்லா, இன்று காலை வாக்களித்தார். கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் நடிகரும் பாஜக வேட்பாளருமான சுரேஷ் கோபி அங்கு வாக்களித்தார்.


மாற்றம் கண்டிப்பாக வருகிறது - பிரகாஷ் ராஜ்




கேரள முதல்வர் பினராயி விஜயன், கண்ணூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை வாக்களித்தார். நடிகர் பிரகாஷ்ராஜ், மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வாக்கு எனது உரிமை. என்னுடைய குரலாக யார் ஒலிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் கடமை இது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். காலையிலேயே பலரும் ஆர்வமாக வாக்களிக்க வந்துள்ளனர். நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி இது என்றார்.


நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைப்பதால் காலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கர்நாடகத்தில் மக்கள் கூட்டம் காலையிலேயே குவிந்து விட்டது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்