சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகத்தில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே மழையும் அவ்வப்போது எட்டிப் பார்த்து செல்கிறது. இன்று தமிழகத்தில் எட்டு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்தியது.
இந்த நிலையில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்த நேரத்தில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர,வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் இருக்கக்கூடும். அப்போது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் ஒரு சில இடங்களில் அசௌரிகம் ஏற்படலாம். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடுமாம்.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என அறிவித்துள்ளது.
நாளை மழை நிலவரம்:
நாளை அதாவது 17ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடுமாம்.
18.4.2024 முதல் 22.4.2024 வரை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.
{{comments.comment}}