சென்னை: லோக்சபா தேர்தல் கைக்கு எட்டும் தூரத்தை எட்டி விட்டது. இன்னும் சில மாதங்களில் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள்... இந்த நிலையில் தேர்தலுக்காக தேசியக் கட்சிகளை விட இந்த முறை பிராந்தியக் கட்சிகள்தான் படு மும்முரமாக ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக.
திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி இந்த தேர்தல் மிக முக்கியமானது. திமுகவைப் பொறுத்தவரை இந்தியா என்ற மிகப் பெரிய எதிர்க்கட்சிக் கூட்டணியில் முக்கியக் கட்சியாக இடம் பெற்றுள்ளது. கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது திமுக கூட்டணி. 9 கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்திருந்தது திமுக.
40 தொகுதிகளிலும் வெல்ல திமுக தீவிரம்
இந்த முறை தேனி தொகுதியையும் சேர்த்து, கூடவே புதுச்சேரியையும் சேர்த்து வெற்றியை அள்ள வேண்டும், 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் திமுக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அப்போதுதான் திமுகவுக்கு இந்தியா கூட்டணியில் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பாஜகவுக்கு கடும் நெருக்கடியை தமிழ்நாட்டில் தர முடியும் என்றும் திமுக நம்புகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.பி ஆனவர் பாரிவேந்தர். இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவரான பாரிவேந்தர் தற்போது திமுகவுடன் இல்லை. பாஜக பக்கம் போய் விட்டார். கடந்த தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் தாமரை சின்னத்தில் நின்று போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பாஜக இல்லாமல் முத்திரை பதிக்க அதிமுக ஆர்வம்
மறுபக்கம்.. அதிமுக. கடந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லாத நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் என இரட்டைத் தலைவர்களுடன் இணைந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அதிமுக. பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி என 7 கட்சிகள் இணைந்த கூட்டணியாக இது மலர்ந்திருந்தது. ஆனால் பெரும் சோகமாக, ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனியில் வென்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியைச் சந்தித்தனர்.
இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. கடந்த முறை இருந்த பலத்துடன் இந்தக் கூட்டணி இப்போதும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. காரணம், தேமுதிக மிகவும் பலவீனமாகியுள்ளது. விஜயகாந்த் இல்லாதது அந்தக் கட்சிக்கு பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகள் கூட்டணியில் இருக்குமா என்றும் தெரியவில்லை.
உற்சாகத்தில் திமுக - அதிமுக
இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும் கூட அதிமுக இந்தத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது. பாஜக இல்லாததால் நிச்சயம் மக்கள், குறிப்பாக இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்று அதிமுக தலைவர்கள் நம்புகின்றனர். எனவே அதிமுகவும் உற்சாகமாகவே தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
திமுகவைப் பொறுத்தவரை வழக்கமாக சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில்தான் அது அதிக நாட்டம் காட்டும். ஆனால் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அது தீவிரம் காட்டுகிறது. இதனால் கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட மிகப் பெரிய டீமை களம் இறக்கியுள்ளது. இந்த டீம், தனது முதல் ஆலோசனைக் கூட்டத்தை முடித்து விட்டது. அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவுள்ளது.
திமுக அதிமுகவின் தீவிரம்.. மக்கள் ஆர்வம்
மறுபக்கம், அதிமுகவும் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ளது. சீனியர் லீடரான பொன்னையன் தலைமையிலான இந்தக் குழுவில் டி ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, ஓஎஸ் மணியன், வளர்மதி, ஆர்பி உதயக்குமார், சிவி சண்முகம், வைகைச் செல்வன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அடுத்தடுத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அம்சங்களை இறுதி செய்ய குழு முடிவு செய்துள்ளது.
தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் இரு பெரும் அரசியல் சக்திகளான திமுகவும், அதிமுகவும் மும்முரமாக இறங்கியிருப்பதால் இவர்களின் தேர்தல் அறிக்கைகளில் எது டாப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடம் எழுந்துள்ளது.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}