மும்பை ரயிலில் குண்டு வெடிக்கும் - தொலைபேசி மூலம் மிரட்டல்

Aug 06, 2023,11:05 AM IST

மும்பை: மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதால் ரயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மும்பை போலீஸாருக்கு இதுதொடர்பாக ஒரு தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ஒரு ஆண் பேசினார். அந்த நபர் கூறுகையில், மும்பையில் உள்ள ஒரு உள்ளூர் ரயிலில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கவுள்ளன.  நான் விலே பார்லே பகுதியிலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.




அந்த நபரின் மிரட்டலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. ரயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினரும், மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


தொலைபேசியில் பேசிய மர்ம நபரைக்  கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.


கடந்த காலங்களில் மும்பை பல தீவிரவாத தாக்குதல் சம்பவங்களைக் கண்டுள்ளது. தொடர் குண்டு வெடிப்புகள் மும்பைக்கு புதிதல்ல. பல முறை தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி காயம்பட்ட நகரம்தான் மும்பை. ஆனால் சமீப ஆண்டுகளாக எந்தவிதமான தாக்குதலும் இல்லாமல் அமைதியாக இருந்து வரும் நிலையில் தொடர் குண்டு வெடிப்பு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

Parliament: 2வது நாளாக இன்றும் அமளி துமளி முழக்கம்.. நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது!

news

சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!

news

தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!

news

Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

news

கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்