மணிப்பூரில் பதற்றம்.. பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி!

Feb 24, 2024,11:27 AM IST

மணிப்பூர்: மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில்  நேற்று இரவு திடீரென குண்டு வெடித்துள்ளது.இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பால் மேற்கு, டாங்மிபந்தில் டி.எம் கல்லூரி உள்ளது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவரை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதில் உயிரிழந்தவர் 24 வயதான ஓனம் கெனேஜி என காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.  பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.மேலும் குண்டுவெடிப்பு குறித்த காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடவில்லை. 




மணிப்பூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பதற்ற நிலைக்கு பிறகு கடந்த சில மாதங்களாக தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது ஆங்காங்கே வன்முறை, பதற்றம் என நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சிகளின் போராட்டம் போராட்டம் போன்றவற்றாலும் அந்த மாநிலத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக வளாகத்திலேயே வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்