மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதைத் தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலை மிரட்டல் சட்டிஸ்கர் மாநிலத்திலிருந்து வந்துள்ளது.
பாலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவரான சல்மான் கானுக்கு தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வருகின்றன. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து அவரை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களால் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இவர் சல்மான் கான், ஷாருக் கானின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலையைத் தொடர்ந்து தற்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பிரிவுகளின் கீழ் மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டலைத் தொடர்ந்து மும்பையிலிருந்து ஒரு போலீஸ் படை, சட்டிஸ்கருக்கு விரைந்துள்ளது.
பாலிவுட்டின் முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து இப்படி கொலை மிரட்டல் விடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக் கானுக்கு தற்போது ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்
உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்
சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!
சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!
புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்
Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!
கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி
{{comments.comment}}