சினிமாவாகிறது இளையராஜாவின் வாழ்க்கை.. ஹீரோ யாரு தெரியுமா ?

Aug 02, 2023,11:16 AM IST
சென்னை : இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்துள்ளார் பாலிவுட் டைரக்டர் பால்கி. அதுவும் தமிழ் டாப் ஹீரோ ஒருவரை தான் ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஷமிதாப் படத்தை இயக்கியவர் பால்கி. சமீபத்தில் பேட்டி அளித்த இவர், இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இளையராஜாவின் வாழ்க்கை படத்தை  தனுசை ஹீரோவாக வைத்து தான் எடுக்க போகிறேன். தனுசை வைத்து இளையராஜாவின் வாழ்க்கை படத்தை எடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. ஏனெனில் சில சமயங்களில் தனுஷிடம் இளையராஜா சாரை பார்த்திருக்கிறேன்.



ஒரு இசையமைப்பாளராக, பாடலாசிரியராக, பாடகராக 1000 படங்களுக்கு மேல் கடந்த 50 ஆண்டுகளாக பணியாற்றியவர் இளையராஜா. ஆசியாவிலேயே முதல் முறையாக லண்டன் பிஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவை வைத்து சிம்பொனி இசையை உருவாக்கியவர் இளையராஜா தான். அவரது சாயலை தனுஷிடம் பார்த்துள்ளேன். தனுஷின் 40 வது பிறந்தநாளில் இதை நான் அவருக்கு தரும் மிகப் பெரிய பரிசாக கருதுகிறேன். ஏனெனில் என்னை போலவே தனுசும் இளையராஜாவின் மிகப் பெரிய ரசிகர். 

தனுசும் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர்  என்பதால் இசைக் கருவிகளை வாசிப்பது அவருக்கு எளிதான விஷயம். அதனால் இளையராஜாவின் கேரக்டரில் நடிக்க தனுஷிற்கு தான் எளிதாக இருக்கும் என்றார்.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் டி 50 படத்தை தனுசே இயக்கி, நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுசுடன் அமலாபால், அபர்ணா பாலமுரளி,துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் நிறைவடைந்த பிறகு இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் தனுஷ் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்