பெரிய சண்டையாய்ருச்சு போலயே.. களத்தில் குதித்தார் ப்ளூசட்டை மாறன்!

Aug 13, 2023,11:27 AM IST
சென்னை: ப்ளூ சட்டை மாறனின் சமீபத்திய டிவீட்டுகள் கடும் அனலைக் கிளப்பிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கும், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கும் இடையே ஒரு புதிய சண்டை மூண்டுள்ளது.

ப்ளூசட்டை மாறன் சமீபத்தில் மாவீரன் படத்தையொட்டி சிவகார்த்திகேயனை தொடர்ந்து சீண்டி வந்தார். அதைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தையொட்டி அந்தப் படத்தை வைத்தும் கடுமையான டிவீட்டுகள் போட்டு வந்தார்.

ரஜினிகாந்த் சொன்ன கதையை வைத்து பருந்துக் குஞ்சுகள் என்று கூறி ரஜினி ரசிகர்களை சீண்டி வந்தார். இந்த நிலையில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், ப்ளூசட்டை மாறனை விமர்சித்து ஒரு பேட்டி கொடுத்திருப்பார் போல. அதை வைத்து தற்போது  அவருடன் பெரும் மோதலில் குதித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இதுதொடர்பாக நீண்டதொரு டிவீட்டையும் அவர் போட்டுள்ளார்.


அந்த டிவீட் இதோ:

ப்ளூ சட்டையை மக்கள் அவாய்ட் பண்ணி விடுவார்கள் - திருப்பூர் சுப்ரமணியம், தியேட்டர் ஓனர் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி.

அதை காலம் தீர்மானிக்கட்டும் ஐயா. அவாய்ட் செய்தாலும் இந்த பூமியில் வாழத்தான் போகிறேன். அதேநேரம் நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்லவர் என்பதையும் இனி அவ்வப்போது மக்களுக்கு தெரிவிக்கவும் விழைந்துள்ளேன்.



அதில் முதலாவது இதுதான். நியாயமான பதில் இருந்தால் கூறுங்கள். அந்த பதில் ஏற்புடையதா என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.  கொரோனா நேரத்தில் மாஸ்டர் படம் வெளியானது. அப்போது 50% பேர் மட்டுமே தியேட்டரில் அனுமதி என்று அரசாங்கம் ஆணையிட்டு இருந்தது. ஆனால் உங்கள் தியேட்டரில் ஒரு காட்சிக்கு 100% டிக்கட் விற்றீர்களா? அதாவது 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் நிர்ணயித்த டிக்கட்டின் விலையை விட இரண்டு மடங்கு பணம் தந்து வாங்கினார்களா?.

இது பற்றி உங்களிடம் யூ ட்யூப் மற்றும் செய்தி சேனல்கள் சேனல்கள் கேள்வி கேட்டன. அதற்கு நீங்கள் சொன்ன பதில்:  பக்கத்துக்கு சீட்டில் ஹாண்ட்பேக் உள்ளிட்ட பொருட்களை படம் காண்பவர்கள் வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் இருமடங்கு விலையில் டிக்கட் விற்கிறோம்.

கேள்விகள்:

1. இது நீங்கள் கூறியதுதானா  அல்லது உங்களைப்போன்ற உருவத்தில் வேறு யாரோ கூறியதா அல்லது உங்கள் குரலை மாற்றி எடிட் செய்து வெளியிட்டார்களா?

2. அரசாங்கம் அனுமதித்ததை விட இருமடங்கு விலைக்கு டிக்கட் விற்றது சட்டப்படி குற்றமா இல்லையா?

3. ஹாண்ட்பேக் உள்ளிட்ட உடமைகளை வெளியே செக் செய்து அனுப்புவது அல்லது அதற்கென உள்ள அலமாரியில் வைப்பதுதானே நியாயம்? இது என்ன உலகில் இல்லாத அதிசயமாக.. அவற்றை வைக்க தனியே ஒரு சீட்டை தியேட்டருக்குள் ஒதுக்கி, அதற்கும் இன்னொரு டிக்கட்டை விற்க வேண்டும்?

செய்தி அல்லது யூட்யூப் சேனல்களுக்கு தைரியம் இருந்தால் இக்கேள்விகளை அவரிடம் எழுப்பி 'நியாயமான' பதிலை வீடியோ பேட்டி மூலம் பெற்றுத்தாருங்கள். உண்மையை சொல்கிறாரா அல்லது மழுப்புகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




ஒவ்வொரு கேள்விக்கும் பதில் ச���ல்லுங்கள் ஐயா. காலம் யாரை ஒதுக்கி தள்ளும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

என் விமர்சனம் உண்டு. நான் உண்டு என்றுதான் இருந்தேன். என் பட ரிலீஸ் சமயம் தவிர்த்து... இதுவரை எங்குமே பேட்டி தந்ததில்லை. உங்களையும், தற்போது யூ ட்யூபில் கூசாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் சீனியர் பத்திரிகையாளர்களையும் பற்றி நான் பேசியதும் இல்லை.

அதேபோல போலி வசூல் நிலவரம் சொல்லும் Social Media Trackers குறித்தும் நான் பேசியதில்லை. 
ஆனால் நீங்கள் எல்லோரும் மாஸ் ஹீரோக்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களை குளிர்விக்க உங்கள் பேட்டிகள் மற்றும் ட்வீட்களில் தொடர்ந்து என் பெயரை பயன்படுத்தி வன்மத்தை கக்கி வருகிறீர்கள்.

உங்கள் வசதி மற்றும் புகழை ஒப்பிட்டால் நானெல்லாம் ஆளே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். இருக்கட்டும். நடப்பது அனைத்தும் நன்மைக்கே. ஆகவே.. வேறு வழியின்றி இன்றுமுதல் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இனி அவ்வப்போது உங்களை போன்றோர் பேசிய வீடியோ ஆதாரங்களை வைத்தே ட்வீட்களை போடுகிறேன். 
எது உண்மை என்பதை மக்களின் பார்வைகளையே விட்டு விடுகிறேன். 

நீ விஜய் சொம்பு என்று மொக்கை போடுவோர் கவனத்திற்கு...  எனது பிகில், பீஸ்ட், வாரிசு விமர்சனங்களை பார்க்கவும். 

மீண்டும் சொல்கிறேன். தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் படங்கள் எனக்கு பிடிக்கவில்லை.  ஆகவே.. நீங்கள் வேண்டுமானால் ஜெயிலருக்கு சொம்படித்து விட்டு போங்கள். ஆனால் அதை பிடிக்கவில்லை என்று கூறும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு.

தொடர்ந்து வடைகளை சுடுங்கள். ஒருவாரமாவது வேடிக்கை பார்க்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு வடையும் உருவான விதம் பற்றி விவரிக்கிறேன்.

The Game begins now.
Ultimate truth vs Shameless lies

இந்த டிவீட்டை வச்சு இப்பவே பெரிய சண்டை போய்ட்டிருக்கு.. இது எதுல போய் முடியுமோ..!


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்