ரஜினிகாந்த் சமாதானம் பேச அழைத்தார்.. ப்ளூ சட்டை மாறன் பரபரப்பு தகவல்!

Aug 17, 2023,10:57 AM IST

சென்னை: ஜெயிலர் படம் தொடர்பாக ப்ளூ சட்டை மாறனுக்கும், ரஜினி தரப்புக்கும் இடையே கடும் புகைச்சல் உருவாகியுள்ளது. 11 மணிக்கு ஒரு வீடியோவை வெளியிடப் போவதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஜெயிலர் படம் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் ப்ளூசட்டை மாறன். இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய பதிவு ஒன்றைப் போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதில், ரஜினிகாந்த் தன்னை சமாதானத்திற்கு அழைத்ததாக கூறியுள்ளார்.




அவர் ஆங்கிலத்தில் போட்டுள்ள பதிவின் தமிழ்மொழியாக்கம்:


தலைவர் இமயமலைக்குப் போவதற்கு ஒரு நாள் முன்பு அவருடைய நெருங்கிய நண்பரும், பழம்பெரும் பத்திரிகையாளருமான செய்யாறு வேலுவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் அவரும் பேசியதன் உரையாடல் விவரம்:


வேலு - ஹலோ மாறன் நாங்கெல்லாம் (சோசியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்கள்) சேர்ந்து தலைவருடன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சந்திக்கப் போகிறோம். அவர் உங்களது விமர்சனங்களால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.  இதற்கு ஒரு முடிவு கட்ட நினைக்கிறார்.  எனவே உங்களையும் அழைக்கக் கூறியுள்ளார். இரவு 8 மணிக்கு மீட்டிங் இருக்கு. நீங்க அவசியம் வரணும்.. நான் லொக்கேஷன் அனுப்புறேன்.


நான் - ஸாரி என்னால் வர முடியாது சார். இந்த நேரத்தில் அவரை சந்திப்பது எனக்கும் தர்மசங்கடமாக இருக்கும். குறிப்பாக உங்களை மாதிரியான ஆட்கள் முன்பு சந்திக்க சிரமமாக இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்.


வேலு - மாறன் கசப்பான சம்பவங்களை மறந்திருங்க. நடந்ததை விட்டுத்த தள்ளுங்க. தலைவர் ரொம்ப தங்கமானவர். பாரபட்சமாக நடத்த மாட்டார். கோபம் காட்டவும் மாட்டார். பாசிட்டிவான விஷயங்கள் மீது எப்பவுமே அவருக்கு அதிக நம்பிக்கை உண்டு.  சில நிமிடம் செலவிடுங்கள். உங்களுக்கு ஏதாவது தர்மசங்கடமாக இருந்தால் நீங்க எப்போது வேண்டுமானாலும் கிளம்பிடலாம்.. 


நான் - சரி சார்.. எப்பவும் நான் பிடிவாதமா இருக்கக் கூடாது. மிகப் பெரிய ஒரு நடிகரிடமிருந்து அழைப்பு வரும்போது அதை உதாசீனப்படுத்தக் கூடாது. நான் கண்டிப்பா வர்றேன். டீட்டெய்ல் அனுப்புங்க. ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு சார்.


வேலு - அது என்ன


நாந் -  அங்கு நடக்கும் நிகழ்வுகளில் சில முக்கியமானவற்றை நான் எனது மொபைலில் பதிவு செய்து கொள்ள அனுமதி வேண்டும். அது ஒரு சாட்சியாக இருக்கும். இல்லாவிட்டால் நாளைக்கு யாராவது தவறானசெய்தியை பரப்பி விடலாம்.  அதாவது தலைவரிடம் மன்னிப்பு கேட்ட ப்ளூசட்டை மாறன் அப்படி இப்படின்னு கிளப்பி விடலாம்.  இந்த அனுமதியை மட்டும் தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்க.


வேலு - ஸாரி மாறன், இதுபோன்ற தனிப்பட்ட கூட்டங்களில் அவர் மொபைல் போனை அனுமதிப்பதில்லையே.


நான் -அப்படின்னா என்னாலும் வர முடியாது சார், தப்பா நினைச்சுக்காதீங்க.


வேலு - சரி, நான் அவருடைய மேனேஜரிடம் பேசிட்டு சொல்றேன்.


2 மணி நேரம் கழித்து...


ஹலோ மாறன்


சொல்லுங்க சார்


தலைவர் உங்க நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டார். உங்க மொபைலை எடுத்துட்டு வரலாம், சிலவற்றை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்ய வேண்டாம். அதேசமயம், நீங்க பதிவு செய்த எதையும் பொது வெளியிட மாட்டேன்னு ஒரு உறுதிமொழி எழுதித் தரணும்.


புரியுது சார்.. நாம நைட் சந்திக்கலாம்.


-----------------


ஆனால் எதிர்பார்த்தபடியே கசப்பான சம்பவங்கள் நடந்தன. எனவே நானும் அவர்களுக்குக் கொடுத்த உறுதியமொழியை உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  நான் எடுத்த வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் இன்று 11 மணிக்குப் போடவுள்ளேன். இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.


நான் மக்களை நம்புபவன். அவர்கள்தான் நேர்மையானவர்கள், பாரபட்சமற்றவர்கள். இந்த வீடியோவைப் பாருங்க. நேரடியாக உங்களது கருத்துக்களைச் சொல்லுங்க.  எதிர்பாராத திருப்பங்களையும், பரபரப்புகளையும் எதிர்பார்த்துக் காத்திருங்க என்று கூறியுள்ளார் ப்ளூசட்டை மாறன்.


வீடியோவில் என்னெல்லாம் இருக்கப் போகுதோ தெரியலையே!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்