வாரிசு "சீரியல்".. இதை மட்டும் மன்னிக்கவே முடியாது.. ப்ளூ சட்டை மாறனின் "குபீர்" டிவீட்!

Jan 21, 2023,01:20 PM IST
சென்னை: திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு திரைப்படத்தை "சீரியல்" என்றும் பொங்கல் பந்தயத்தில் துணிவை வாரிசு (சீரியல்) வென்றது என ட்விட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நடிகர் விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் எடுக்கப்பட்ட 'வாரிசு' திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டது.

நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். குடும்பங்கள் கொண்டாடும் கதையாக எடுக்கப்பட்ட வாரிசு திரைப்படம்,  மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. போதாக்குறைக்கு அஜித்தின் 'துணிவு' படத்துடன் வாரிசு போட்டிபோட்டதால் ரஷ்யா - உக்ரைன் போரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே செம வாய்ச்சண்டையும் வலுத்து வந்தது.

போஸ்டர்களிலும் இரு தரப்பு ரசிகர்களும் பொளந்து கட்டி வந்தனர். இப்படிப்பட்ட பின்னணியில் இரு படங்களும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இரு படங்களும் மாறி மாறி வசூலைக் குவித்தன. இரு படங்களுக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு விதமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் குறையவில்லை. இரு படங்களுமே  200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்  ப்ளூ சட்டை மாறன் வாரிசை வம்புக்கிழுத்தார். வழக்கம் போல் தனது ஸ்டைலில் இருபடங்களையும் ரோஸ்ட் செய்துவிட்டார் என கூறலாம். முக்கியமாக விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை ஒரு ஹிந்தி சீரியல் என கூறியது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியது.

அத்தோடு நில்லாத மாறன் வாரிசு படத்தை சீரியல் படம் என விமர்சித்தது மீண்டும் ரசிகர்களை சீண்டியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் போட்ட ட்விட்டில், வாரிசு (சீரியல்) பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது என்றும் துணிவை விட வாரிசு படத்திற்கு குடும்பங்கள் அதிகம் வருவதற்கு கரணம் அது ஒரு சீரியல் என்றும் கூறியுள்ளார். மேலும் இருபடங்களின் வசூல் தெரிய சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாரிசு திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தில்ராஜ் தெரிவித்த பொய்யை மட்டும் மன்னிக்கவே முடியாது எனவும் கூறிப்பிட்டுள்ளார்.  பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் தற்போது இணையத்தகத்தில் செம வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்