பெங்களூர்  ராமேஸ்வரம் கபே ஹோட்டலில்.. பலத்த சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்தது.. 4 பேர் காயம்!

Mar 01, 2024,03:41 PM IST

பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் மர்ம பொருள் வெடித்து நான்கு பேர் படு காயமடைந்தனர். இங்கு வெடித்தது வெடிகுண்டா அல்லது சிலிண்டரா என போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


பெங்களூர் அருகே இந்திரா நகரில், ஒயிட் பீல்டு பகுதியில் 80 அடி சாலையில், ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் உள்ளது. அந்தப் பகுதியில் பிரபலமானது இது. தென்னந்திய உணவு வகைகளுக்குப் பெயர் போன ஹோட்டல் இது. மாதம் ரூ. 5 கோடி வரை இங்கு வசூல் ஆகும் அளவுக்கு மிகப் பிரபலமான ஹோட்டலும் கூட.  இந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாம் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால்தான் அவர் பிறந்த ராமேஸ்வரத்தின் பெயரை ஹோட்டலுக்கு வைத்தாராம்.




மிகச் சிறிய இடத்தில்தான் இந்த ஹோட்டல் நடந்து வருகிறது. இந்த ஹோட்டலில்தான் இன்று மர்மப் பொருள் வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதில் ஒரு பெண் உட்பட 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.


தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து வெடித்தது சிலிண்டரா அல்லது வெடிகுண்டா என போலீசார் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்