நொடிக்கு நொடி திரில்லிங்தான்.. ஒரே இரவில் நடக்கும் ஜிலீர் சம்பவங்கள்.. பகீரடிக்க வரும்.. பிளாக்!

Aug 29, 2024,03:02 PM IST

சென்னை:   நொடிக்கு நொடி திரில்லரான கதைக்களத்தில் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் பிளாக். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறதாம்.




தமிழ் சினிமாவில்  திரில்லர் படங்கள் தற்போது தனித்துவம் பெற்று வருகின்றன. அதிலும் பரபரப்பான திரில்லர் கலந்த திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மக்கள் இப்படங்களை கொண்டாடியும் வருகின்றனர். அந்த வரிசையில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் வித்யாசமான திரில்லர் கதையாக பிளாக் படம் உருவாகி வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்துள்ளது.


இப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் பிளாக் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை கே ஜி பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளார். சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.




இப்படத்தில்  ஜீவா நாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடியாக  பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிளாக் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் தற்போது படம் வெளியீடு குறித்த வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் கே.ஜி பாலசுப்பிரமணி கூறுகையில், ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம் நொடிக்கு நொடி திர்லர் ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும் அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும் இதை பிறரிடம் சொன்னால். 


நம்ப முடியாத வகையிலும் இருக்கும் அப்படிப்பட்ட கதை தான் பிளாக். நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம் யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Govt Holidays 2024: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்