வீட்டுல குட்டீஸ்களுக்கு ரத்த சோகையா இருக்கா.. அப்ப பேசாம இதை டிரை பண்ணிப் பாருங்களேன்!

Jun 27, 2024,03:12 PM IST

உங்கள் குழந்தை அனிமியா என சொல்லக்கூடிய ரத்த சோகை இல்லாமல் ஆரோக்கியமாக வளர்க்க ஆசையா..? எதிர்காலத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் வராமல் தவிர்க்க வேண்டுமா..அப்ப கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுங்கள். 


கருப்பு உளுந்தின் நன்மைகள்:




கருப்பு உளுந்தில் பொட்டாசியம், கல்சியம், இரும்புச்சத்து, போன்ற அதிக அளவு  சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த கருப்பு உளுந்தினால் செய்யப்படும் உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேணாலும் சாப்பிடலாம். அப்படி தினசரி சாப்பிட்டு வந்தால் மூட்டு எலும்புகள் வலுவடையும். 


இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிக்கக் கூடிய தன்மையையும் உள்ளது. அதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் மலம் எளிதில் வெளியேற்ற இந்த கருப்பு உளுந்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி இந்த கருப்பு உளுந்துகளைக் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 


இது மட்டுமல்லாமல்  வயது வந்த பெண் குழந்தைகளுக்கு ஏன் நம் முன்னோர்கள் உளுந்துங்களியை உணவில் அதிகம் சேர்க்கிறார்கள் என்று தெரியுமா.. தினந்தோறும் கருப்பு உளுந்தால் செய்யப்படும் உணவுகளை வயது வந்த கன்னிப் பருவ பெண்களுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்குமாம். இதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்குமாம். இதனால்தான் வயது வந்த பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்து, கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து களி செய்து தினமும் கொடுத்து வருகின்றனர். 


இப்ப புரிகிறதா. நம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் எந்த விஷயத்தையும் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று.  சரி கருப்பு உளுந்து கொண்டு என்ன வகையான உணவுகள் செய்யலாம்.. என்று பார்ப்போமா..?


கருப்பு உளுந்து இட்லி பொடி: 


கருப்பு உளுந்து- ஒரு கப்

வெள்ளை உளுந்து- ஒரு கப்

கடலை பருப்பு- 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வத்தல்- 10 

கருவேப்பிலை- ஒரு கைப்பிடி அளவு 

பூண்டு- 5 பல்

கொத்தமல்லி விதை- ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்- அரை டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையான அளவு 


அடுப்பில் வாணலியை வைத்து நன்றாக  காய்ந்ததும் அதில் கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்து, கடலை பருப்பு கலந்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். (கருப்பு உளுந்து மட்டும் வறுத்தால் கருப்பு உளுந்து வறுபடுவது தெரியாது அதனால்தான் வெள்ளை உளுந்து கலந்து வறுத்தால் உளுந்து சிவப்பது தெரியும்). இதன் பின்னர் கருவேப்பிலை வத்தல், கொத்தமல்லி விதை, பூண்டு ஆகியவற்றை  ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறியதும் அதனுடன் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்தால் கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.


கருப்பு உளுந்து லட்டு:




ஒரு கப் கருப்பு உளுந்தை நன்றாக வறுத்து அதனை ஆறவிட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் நாலு டேபிள் ஸ்பூன் நெய்யை நன்றாக காயவிட்டு அதனுடன் கலந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு  கொடுக்கலாம்.


கருப்பு உளுந்து பொடி: 


கருப்பு உளுந்தை நன்றாக வறுத்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதன் மீது கருப்பு உளுந்து பொடியை தூவி ஆம்லெட்டாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது தவிர இந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த ஆம்லெட்டை  தினசரி வயது வந்த பெண் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கருமுட்டை நன்கு வளர்ச்சி அடையும்.


இதே கருப்பு உளுந்து பொடியை ஒரு கப் எடுத்துக்கொண்டு அதனை ஒரு கப் தோசை மாவுடன் கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் இந்த கலவையை தோசையாக வார்த்து பரிமாறினால் சுவையான கருப்பு உளுந்து தோசை தயார்.


கருப்பு உளுந்து துவையல்: 


மல்லித் துவையல், புதினா துவையல், கொள்ளு துவையல், பருப்பு துவையல், இப்படி எத்தனையோ துவையல செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கருப்பு உளுந்து துவையல் சாப்பிட்டு இருக்கீங்களா? ரொம்ப சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


உளுந்தம் பருப்பு- ஒரு கப் 

மிளகாய் வத்தல்- 4 

புளி-சிறிய நெல்லிக்காய் அளவு 

கருவேப்பிலை-

சிறிதளவு

பூண்டு-3 பல்

தேங்காய்-தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு 


மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஆறியதும், உப்பு சேர்த்து  கெட்டியாக அரைத்துக் கொண்டால் உளுந்தம் பருப்பு துவையல் தயார். சாப்பிட்டு ட்ரை பண்ணி சொல்லுங்க.


உளுந்தம் பருப்பு பூரண கொழுக்கட்டை:


முதலில் கொழுக்கட்டை மாவை தண்ணீர் உப்பு போட்டு நன்றாக பிணைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இதன் பின்னர் உளுந்தம் பருப்பை நன்றாக வறுத்து  கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பொடித்த உளுந்தம் பருப்புடன் ஏலக்காய், நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், போட்டு கலந்து கொள்ள வேண்டும்.  பின்னர் கொழுக்கட்டை மாவை தட்டையாக தட்டிக் கொண்டு அதன் உள்ளே  கருப்பு உளுந்து பூரணத்தை  வைத்து மடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இட்லி பானையில் மடித்து வைத்த பூரண கொழுக்கட்டைகளை வேக வைக்க வேண்டும். சூப்பரான, அருமையான, ஆரோக்கியமான, குழந்தைகளுக்கு பிடித்தமான கருப்பு உளுந்து பூரண கொழுக்கட்டை தயார்.


இதேபோல உளுந்தம் பருப்பு சுண்டல், உளுந்தங்களி போன்றவை செய்து புதுவிதமாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்