பேருதான் "ஃபார்பிடன் ரைஸ்".. ஆனா சாப்பிட தடையே இல்லைங்க.. சத்தான கவுனி கஞ்சி!

Jan 24, 2024,06:09 PM IST


சென்னை: வணக்கங்க, எல்லாரும் எப்படி இருக்கீங்க.. வரிசையா நாலு நாள் லீவ் வரப்போகுது?.. குட்டீஸ்களுக்கு எல்லாம் ஒரே ஜாலிதான்.. கையில பிடிக்க முடியாது.. அவங்களோட சேர்ந்து லீவை நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுங்க.


அப்படியே இப்ப, நான் சொல்ல போற இந்த  ரெசிபியையும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ்... உங்களுக்கு மட்டுமல்ல, வீட்டுல உள்ள எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும்.


இன்னைக்கு ஈசி குக்கிங்ல நான் சொல்ல போறது.. ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி கஞ்சி பத்தி தாங்க. பெரியவங்கள்ள இருந்து குழந்தைங்க வரைக்கும் எல்லாரும் சாப்பிடலாம். அவ்வளவு நல்லா இருக்கும். ஈசியாவும் செய்யலாம்.




அதை விடுங்க மேடம்.. கருப்பு கவுனி அரிசில அப்படி என்ன இருக்கு.. அதைச் சொல்லுங்கன்னு.. நீங்க கேட்பது புரியுதுங்க..!


ஒன்னா இரண்டா.. ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் இருக்குங்க. அதுல சிலவற்றை சொல்றேன், தெரிஞ்சுக்கோங்க. கவுனி அரிசி கருப்பா இருக்க காரணம் அதில் உள்ள அந்தோசியனின் (Anthocyanin) என்னும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் தாங்க. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுது. மேலும் புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுதுங்க. கல்லீரலில் படியும் கொழுப்புகளை கரைக்கவும் இது உதவி செய்யுதாம்.. அவ்வளவு அருமையான ஒரு உணவுப் பொருள்தான் இந்த கருப்பு கவுனி அரிசி.


சரி, ஏகப்பட்ட ஹெல்த் பெனிபிட்ஸ் உள்ள இந்த கஞ்சியை எப்படி செய்யலாம்னு பார்ப்போமா!


தேவையான பொருட்கள்:


கருப்பு கவுனி அரிசி-  2 கப்

சீரகம்- 1 ஸ்பூன்,

உப்பு -தேவையான அளவு


செய்முறை:




முதலில் கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். காலையில செய்றதுனா முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீரை வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ரவை பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும். 


பின் ஒரு குக்கரில் அரைத்த அரிசி, ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஏழு விசில் வரும் வரை வேக வைக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கிய கஞ்சியுடன் மோர் கலந்து, சின்ன வெங்காயம் நறுக்கி போட்டு கலக்கினால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கஞ்சி ரெடி.


கொஞ்சம் வெயிட் ப்ளீஸ்.. இதுக்கு சைட் டிஷ் வேணாமா.. அதையும் சொல்றேன்.. கேட்டுக்கங்க. 


சைட் டிஷ்:


சின்ன வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். சூப்பரான சைடு டிஷ் தயார். அப்புறம் வத்தல், வடகமும்  சேர்த்து சாப்பிடலாம்.. அதுவும் கூட இந்த கஞ்சியுடன் நல்லா இருக்குங்க.


பின்ன என்னங்க.. டெய்லி அதே இட்லி .. அதே தோசை.. அதே சப்பாத்தி.. அதே பொங்கல்னு போட்டுப் போரடிக்காம, அப்பப்ப அதுக்கெல்லாம் லீவு விட்டுட்டு ஆரோக்கியமும் செய்வதற்கு சுலபமுமான இந்த கஞ்சியையும் ட்ரை பண்ணுங்க.


ஓகே.. வேற ஒரு ஹெல்த் ரெசிபியோட மீண்டும் சந்திக்கலாம்.. அதுவரைக்கும் "பை"ங்க.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்