டெல்லி: கூட்டணி ஆட்சி அமைத்தாலும் கூட பிரதமர் மோடி எப்போதும் போல கெத்தாக இருக்க வேண்டும். அவரது கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாகவும், கவனமாகவும் இருக்கிறதாம். அதில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் பாஜக கூறியுள்ளதாம்.
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளது. பிரதமராக 3வது முறையாக பதவியேற்கவுள்ளார் நரேந்திர மோடி.
இந்த ஆட்சி அமைவதில் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முக்கிய புள்ளிகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களது ஆதரவு அரசு நீடிக்க மிக முக்கியம் என்பதால் பாஜக இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்திலும் கூட எப்போதும் பிரதமருக்கு அருகில் அமர்ந்திருக்கும் அமித்ஷா, கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு, பிரதமர் அருகில் நாயுடுவும், அவருக்கு அருகில் நிதீஷ் குமாரும் அமர்ந்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கூட்டணிக் கட்சிகள் பாஜகவிடம், முக்கிய இலாகாக்களை கேட்டு டிமாண்ட் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதாதளமும் முக்கிய இலாகாக்களை கேட்டுள்ளனவாம். அதேபோல குமாரசாமி கட்சியும் முக்கிய இலாகாவைக் கேட்டுள்ளதாம். பவன் கல்யாணுக்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதாலும், கூட்டணி பலம் இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது, நீடிக்க முடியாது என்பதாலும், பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பாஜக தரப்பில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதாவது எந்தக் காரணத்தைக் கொண்டும் முக்கிய இலாகாக்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக நிதித்துற, உள்துறை போன்றவை. அதேபோல கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்களுக்கு ரொம்பவும் இறங்கிப் போய் விடக் கூடாது என்பதிலும் பாஜக கவனமாக இருக்கிறதாம். இதை விட முக்கியமாக, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி இருக்கும், இருக்க வேண்டும். அவரது கெத்து குறைந்து விடக் கூடாது. அது குறையவும் அனுமதிக்கக் கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளதாம்.
இதைக் கூட்டணிக் கட்சிகளுக்கும் கூட பாஜக தப்பில் டீசன்ட்டாக சொல்லி விட்டார்களாம். பிரதமர் மவுசு குறையாமல் இருந்தால்தான் பொதுமக்கள் மத்தியில் அரசு மீது ஒரு மரியாதை இருக்கும். மோடிக்கு என்று ஒரு இமேஜ் இருக்கிறது.. உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் மோடிக்கு என்று ஒரு தனி கவுரவம் உள்ளது. அது குறைந்து விட்டால் நாட்டுக்கே பெரும் பாதகமாகி விடும் என்பதால் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள தயாரில்லை என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறதாம்.
ஆனால் கூட்டணி அரசியலில் இதை எப்படி அவர்கள் மேனேஜ் செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். மன்மோகன் சிங் அரசுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 10 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் மத்தியில் கூட்டணி அரசு அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் அரசு முழுமையாக கூட்டணி அரசாகவே தனது முழுப் பதவிக்காலத்தையும் முடித்தது என்பது நினைவிருக்கலாம்.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}