டெல்லியின் அடுத்த முதல்வர் யார்..? இன்று.. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

Feb 19, 2025,10:24 AM IST

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி முதல்வராக யார் அரியணையில் ஏறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.



70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. டெல்லியில் தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் யார் அடுத்த முதல்வர் என்று எதிர்பார்ப்பு அங்கு நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா டில்லியின் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.

ஏனெனில் டெல்லி முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக  எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, பாஜக எம்.பி.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள்  கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தக் கூட்டத்தில் தேர்வு  செய்யப்படும் டெல்லி முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி, இதற்கான பதவியேற்பு விழா நாளை ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்