பதற்றத்தில் பிதற்றும் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 3 கேள்விகள்.. எக்ஸ் தளத்தில் அண்ணாமலை அறிக்கை

Mar 10, 2025,05:58 PM IST

சென்னை: பதட்டத்தில் பிதற்றுகிறார் தமிழக முதல்வர். மத்திய கல்வி அமைச்சர்   சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். அத்துடன் 3 கேள்விகளை கேட்டும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை  பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ம் அமர்வு இன்று காலை தொடங்கியது. இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  திமுக எம்பிக்கள் தமிழகத்திற்கு நீதி வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. மத்திய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை கூறி தவறாக வழி நடத்துகிறார் என பேசினார்.


இதற்கு பதில் அளித்த தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாட்டு மாணவர்களை தவறாக வழி நடத்தி செல்கிறது திமுக அரசு. தமிழக எம்பிக்கள் அநாகரிகமானவர்கள் என பேசினார். இதற்கு, திமுகவினர் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இந்த எதிர்ப்புக்கு  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெற்றார். 




இதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கடும் கண்டன ஆ,ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும் திமுகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு 3 கேள்விகள்.


முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர்  அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.


இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?


உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?


மூன்றாம் கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்?


ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

news

நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

news

தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!

news

Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??

news

மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

news

மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

news

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!

news

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்