பாஜக இதைச் செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் ஆட்சி கவிழும்.. பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி

Jun 08, 2024,05:35 PM IST

டெல்லி: மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக, விரைவில் வரப் போகும் 3 மாநிலத் தேர்தலில் குறைந்தது 2 மாநிலங்களையாவது வெல்ல வேண்டும். ஒரு வேளை மூன்று மாநிலங்களிலும் அது தோற்று விட்டால், மத்தியில் ஆட்சி கவிழும் ஆபத்தைத் தவிர்க்க முடியாது என்று அரசியல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.


2014ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக பெரும் வெற்றியைப் பெற உத்தி வகுத்துக் கொடுத்தவர் பிரஷாந்த் கிஷோர். அதன் பிறகு அவர் பல்வேறு கட்சிகளுக்கும் உத்திகள் வகுத்துக் கொடுத்து அந்தக் கட்சிகளும் பெரும் வெற்றியைப் பெற்றன. திரினமூல் காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி என்று இந்த லிஸ்ட் பெரியது. ஆனால் பிரஷாந்த் கிஷோர் வலையில் சிக்காத கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே.


இந்த நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் கூறிய கணிப்புகள் பொய்த்துப் போய் விட்டன. 300 இடங்களுக்கு மேல் பாஜக வாங்கும் என்று  அடித்துக் கூறியிருந்தார் பிகே. ஆனால் பாஜகவால் 250 இடங்களைக் கூட பெற முடியாமல் போய் விட்டது. இது பாஜகவை மட்டுமல்லாமல், பிரஷாந்த் கிஷோரையும் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது கணிப்பு மிகப் பெரிய அளவில் தவறியதால் அவரும் அதிர்ச்சியில் உள்ளார்.


இந்த நிலையில் இந்தியா டுடே டிவிக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் விரிவாக அவர் பாஜக குறித்துப் பேசியுள்ளார். பிரஷாந்த் கிஷோர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:




பாஜக கூட்டணி அரசு நீடிக்காது என்று நான் கூற மாட்டேன். ஆட்சி நீடிக்கும். அதில் சில சவால்கள் உள்ளன. ஒரு வேளை ஆட்சி  தொடர்ந்தால் அது மொத்த அரசியல் சூழலையும் மாற்றும். இதை இந்தியா கூட்டணி தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு ஜார்க்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில்தான் கவனம் செலுத்துவார்கள். அங்கு வெற்றி பெற வேண்டியது அவர்களுக்கு முக்கியம்.


அதை விட முக்கியம், பாஜக இந்த மாநிலங்களில் குறைந்தது 2 மாநிலங்களிலாவது வெல்ல வேண்டியது. முடிந்தால் மூன்றிலும் வெல்வது நல்லது. அப்படி நடக்காமல் போனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும், ஆட்சி கவிழும் அபாயத்தையும் தவிர்க்க முடியாது. குழப்பம் பாஜகவுக்குள் ஏற்பாடுத, மாறாக கூட்டணிக் கட்சிகளுக்குள் அதிருப்தி ஏற்படலாம். அவர்கள் பிய்த்துக் கொண்டு போக முயலலாம். அப்படி நடந்தால் பாதிக்கப்படப் போவது பாஜகதான்.


மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதற்கேற்பத்தான் தலைவர்கள் செயல்படுவார்கள். மக்கள் பாக மீது அதிருப்தியைக் காட்டினால், உடன் இருக்கும் கட்சிகள் பாஜகவை விட்டு விலகவே முயற்சிப்பார்கள். மக்களைப் பொறுத்தவரை மோடியின் செல்வாக்கு இறங்கியுள்ளது, ஆனால் அவர் முழுமையாக அவுட் ஆகி விட்டதாக யாரும் கருதவில்லை என்றார் அவர்.


3 மாநில நிலவரம் என்ன?




பிரஷாந்த் கிஷோர் கூறுவதிலும் அர்த்தம் உள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கும், 2024 தேர்தலுக்கும் இடையே பாஜக இந்த மூன்று மாநிலங்களிலும் பலவீனம் அடைந்துள்ளது. 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் இங்கு பாஜக 11 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு இடத்தில் வென்றது.  மீதம் உள்ள 2 இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 


2024 தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தமாக 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதில் பாஜக 8 இடங்களிலும், ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் ஒரு இடத்திலும் வென்றுள்ளன. காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 5 இடங்களை வென்றுள்ளது. இந்தக் கூட்டணியின் எழுச்சிக்கு, முன்னாள் பிரதமர் ஷிபு சோரன் அமலாக்கத்துறையினரால், வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட விதமே காரணம் என்று சொல்கிறார்கள். 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு சரிந்திருப்பதாலும், ஷிபு சோரன் விவகாரம் ஜேஎம்எம் கட்சிக்கு வலு சேர்த்திருப்பதாலும் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக இங்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும்.


ஹரியானா நிலவரம்


ஹரியானாவில் மொத்தம் 10 எம்.பி தொகுதிகள் உள்ளன. 2019 தேர்தலில் இங்கு பாஜக அலை வீசியது. இதனால் பத்து தொகுதிகளையும் லட்டு போல அள்ளியது பாஜக. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைத்தது. 2024 தேர்தலில் நிலைமை அப்படியே மாறி விட்டது. இந்த முறை வெறும் 5 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. மற்ற 5 இடங்களையும்  காங்கிரஸ் அள்ளி விட்டது. இங்கு இந்தியா கூட்டணியாக போட்டியிடவில்லை. மாறாக காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டன. இதில் ஆம் ஆத்மி மண்ணைக் கவ்வி விட்டது.


ஹரியானால் பாஜக அரசுதான் தற்போது நடந்து வருகிறது. ஆனால் அங்கும் ஏகப்பட்ட அதிருப்திகள், எதிர்ப்புகள், உட்கட்சிக் குழப்பங்கள் உள்ளன. எனவே இந்த மாநிலத்தில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெல்வது சவாலானதாகவே இருக்கும்.


மகாராஷ்டிரா




மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணிக்கு கடும் பின்னடைவே கிடைத்துள்ளது. அங்கு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவை பாஜக உடைத்து தனித் தனி பிரிவுகளாக்கியது. பிரிந்து வந்த பிரிவுகளின் தலைவர்களுக்கு முதல்வர் உள்ளிட்ட பதவிகளையும் கொடுத்தது. ஆனால் தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் இந்த பிரிந்து வந்த கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர்.


மொத்தம் உள்ள தொகுதிகளில் 30 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், ஒரு இடத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளரும் வென்றுள்ளனர். இந்த அதிருப்தியாளர் இப்போது காங்கிரஸுக்கே ஆதரவு தெரிவித்துள்ளார். மீதமுள்ள 17 இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி வென்றுள்ளது. 


காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும் வென்றுள்ளன. உத்தவ் தாக்கரே சிவசேனா 9 இடங்களிலும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றுள்ளன. ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 7 இடங்கள் கிடைத்துள்ளன. அஜீத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்துள்ளது.


மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணிக்கு பெரும் அடி கிடைத்திருப்பதால் இங்கும் சட்டசபைத் தேர்தலில் இந்தக் கூட்டணி போராட வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்