"எதைப் பற்றியும் கவலை இல்லை.. தமிழ்நாட்டில் பாஜக வலுவாக வேண்டும்".. அண்ணாமலை அதிரடி!

Jan 27, 2023,01:00 PM IST
டெல்லி:  தமிழ்நாட்டில் பாஜக வலுவடைய வேண்டும். அது மட்டும்தான் எங்களது நோக்கம். வேறு எதைப் பற்றியும், எந்தக் கட்சியைப் பற்றியும், எந்தத் தலைவர்கள் குறித்தும் நாங்கள் கவலைப்படவில்லை, அவர்களை எதிரியாகவும் நினைக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



ஏஎன்ஐ செய்தி ஏஜென்சிக்கு அண்ணாமலை ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அண்ணாமலை பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

நாங்கள் எந்தக் கட்சிக்கும், எந்தத் தலைவருக்கும் எதிரி இல்லை. பாஜக வலுவாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வேறு எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை.  நாங்கள் அதிமுகவுடன் வைத்துள்ள கூட்டணியானது, திமுக கூட்டணி போல சுய சொகுசுக்கான கூட்டணி அல்ல. 

இது மரியாதைக்குரிய கூட்டணி. மரியாதைக்கான கூட்டணி. அதிமுகவுடன் எங்களுக்கு  பல்வேறு முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் இது கொள்கை அடிப்படையில் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் பாஜகவுக்கென்று தனித்த அடையாளம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை அப்படியே வாக்குகளாக மாற்றும் திறனும் எங்களுக்கு உள்ளது.

சுயமரியாதை மற்றும் பலத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். இதுதான் மக்கள் மனதிலும் இருக்க வேண்டும். நாங்கள் கூட்டணியாக போகும்போது மக்கள் எங்களை மரியாதையுடன் பார்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிட்டோம். கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்க விரும்பி தனித்துப் போட்டியிட்டோம்.  அது பூத் அளவிலான தொண்டர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுக்க உதவியது. 

பிரதமர் மோடியின் இமேஜ் தமிழ்நாட்டில் பிரமாதமாக உள்ளது. அதை வாக்குகளாக நாங்கள் மாற்ற வேண்டும். நிச்சயம் அதைச்  செய்வோம். தமிழ்நாட்டில் அடி மட்ட அளவில் பாஜக வலுவாக வேரூண்றியுள்ளது. அதை மேலும் விரிவாக்கி வருகிறோம்.  2019ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பார்த்தால், அப்போது பாஜக தனித்துப் போட்டியிட்டது. எங்களது கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் 19 சதவீதம். இது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாக்கு சதவீதம். 2014ம் ஆண்டு முதலே மோடியின் அலை தமிழ்நாட்டில் வீசத் தொடங்கி விட்டது என்றார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்