பாஜகவின் புதிய ஸ்டிராட்டஜி.. மொத்தம் 267 வேட்பாளர்கள்.. இதுவரை 21% எம்.பிக்கள் ரிஜக்ட்டட்!

Mar 14, 2024,06:09 PM IST

டெல்லி: 2 கட்டமாக இதுவரை 267 வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக மேலிடம் இதுவரை 21 சதவீத சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுத்துள்ளது. மக்கள் மத்தியில் கெட்ட பெயர், கட்சிக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்தவர்களை இந்த முறை நீக்கியுள்ளது பாஜக. 


குறிப்பாக டெல்லியில் மொத்தம் உள்ள 7 சிட்டிங் எம்.பிக்களில் ஒருவருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற 6 பேரையும் தூக்கி விட்டது பாஜக. இதில் மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தனும் அடக்கம். அதேபோல டிக்கெட் கிடைக்காது என்று தெரிந்துதான் அரசியலை விட்டே போவதாக முன்பே கூறி விட்டார் கெளதம் கம்பீர். இவர்கள் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளதால் மீண்டும் சீட் தரவில்லையாம் பாஜக தலைமை.




மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து, ஆப்பை எடுத்து தானே வைத்துக் கொள்ள விரும்பாததால்தான், அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் சீட் கொடுக்காமல் நிராகரித்துள்ளதாம் பாஜக. அடிமட்ட அளவில் கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் இவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாம். நிறுத்தினால் நிச்சயம் இவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதும் இன்னொரு காரணம்.


வேட்பாளர்கள்  விஷயத்தில் கவனமாக இருந்தால்தான் 370 தொகுதிகளை பாஜகவால் தனித்து வெல்ல முடியும் என்றும் மேலிடம் கருதுகிறதாம்.  முதல் வேட்பாளர் பட்டியலில் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. அதில் 33 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் தரப்படவில்லை. அதில் முக்கியமானவர்கள் பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதுரி, பர்வேஷ் வெர்மா. இவர்கள் வெறுப்புப் பேச்சுகளுக்குப் பெயர் போனவர்கள் ஆவர். 2வது பட்டியலில் 30 சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்