இவர்தான் டாக்டர் வேதா.. யாரை எதிர்த்து களம் இறங்கியிருக்கிறார் தெரியுமா.. ஆடிப் போன பாஜக!

Mar 27, 2024,03:02 PM IST

சென்னை:  விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகியான வேதா சுயேட்சையாக போட்டியிடுவதால் அக்கட்சிக்குள்ளையே பரபரப்பு நிலவி வருகிறது.


சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது மனைவி ராதிகா  விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராதிகா சரத்குமார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பின்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.




இந்த நிலையில் ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான டாக்டர் வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  ஜெயசீலனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் டாக்டர் வேதா. பாஜகவில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராதிகா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாஜக நிர்வாகியான வேதா இன்று மனு தாக்கல் செய்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து டாக்டர் வேதா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். திருமங்கலத்தில் மருத்துவராக பணிபுரிகிறேன். பாஜகவில் சீட் கொடுக்கவில்லை. அதனால் தான் தனி அணியாக "டெல்லி பாஜக மோடி அணி" சார்பாக நான் போட்டியிடுகிறேன். 


தமிழக பாஜக மோடி அணி சார்பாக போட்டியிடவில்லை. நான் தனி அணியாக நிற்கின்றேன். ரூல்ஸ் இருக்கு. எந்த பிரச்சனையும் இல்லை. ராதிகாவை எதிர்த்து நிற்கவில்லை. அவர்களே ஏத்துக்கிட்டாங்க. பாஜகவை எதிர்த்தும் நிற்கவில்லை. எல்லோரையும் எதிர்த்து தான் போட்டியிடுகிறேன்.


பிரதமர் நரேந்திர மோடி கேரண்டி கொடுத்ததினால தான் நான் தனியாக போட்டியிடுகிறேன். தமிழக பாஜக, டெல்லி பாஜக என ஏன் பிரிக்கிறீங்க என செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரசை மட்டும் இந்தியா காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என ஆயிரம் காங்கிரஸ் ஆக பிரித்திருக்கிறார்கள். அதை ஏன் கேள்வி கேட்கவில்லை. பாஜகவில் இருந்து வரக்கூடாதா. தப்பே கிடையாது என்ன தடாலடியாக பேசினார் வேதா.


இவர் சீரியஸாக போட்டியிடுகிறாரா அல்லது வேற காரணமா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்