சென்னை: கேரள மாநிலத்தின் குப்பைக்கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதை திமுக அரசு தடுக்கவேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், கழிவுகள், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று கேரளாவில் கொட்டுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. மேலும், எல்லை பகுதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதற்கு எல்லாம் தீர்வு ஏப்போது ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருநெல்வேலி ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,இ்நத விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி நீர் உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை தனது கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை, கேரள கம்யூனிஸ்ட் அரசின் குப்பைக் கிடங்காக மாற்றவும் அனுமதித்திருக்கிறார்.
கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. தினம் தினம் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் இந்தக் கழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய சோதனைச் சாவடிகள், வெறும் வசூல் மையங்களாக மட்டுமே மாறிவிட்டன.
ஒருபுறம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் திமுக அரசு, மறுபுறம் தமிழகத்தை குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரமான அனுமதி அளித்துள்ளது. அதிகாரிகளிடமும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்தும், இதனைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க திமுக அரசுக்குத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
உடனடியாக, கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத் திரட்டி, இந்த உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன் என்பதைத் திமுக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather report: 6 மாவட்டங்களில் இன்று கன மழை.. 4 மாவட்டங்களில் நாளை மிக கன மழைக்கு வாய்ப்பு
மருத்துவ குப்பைகளை.. லாரியில் எடுத்துச் சென்று கேரளாவில் கொட்டுவேன்.. அண்ணாமலை ஆவேசம்
ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
கிண்டி மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து..விக்னேஷ்வரனுக்கு ஜாமின்..காவல்துறைக்கு ஹைகோர்ட் கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி, அமித்ஷா என்றால் பயம்.. அமைச்சர் கே.என்.நேரு
ரூ. 4.6 கோடி.. வாங்கிய பரிசுப் பணத்தில் கால்வாசியை வரியாக கட்டும் குகேஷ்.. தோனி சம்பளத்தை விட அதிகம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட சட்ட மசோதா.. மக்களவையில் தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாட்டின் பன்முகத்தன்மையை முழுமையாக அழித்து விடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
Sugar symptoms.. உங்களுக்கு சர்க்கரை நோய் வர போகிறது என்பதற்கான Prediabetic அறிகுறிகள்
{{comments.comment}}