சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மார்க் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் மது கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் சமீபத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது . 3 நாட்கள் நடந்த சோதனைக்குப் பின்னர் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. பாஜக சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தலைமைச் செயலகம், டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாஜக தலைவர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களை வீட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து வைத்தனர். தடையை மீறி போராட்டம் நடத்தக் கிளம்பிய டாக்டர் தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட அண்ணாமலை கூறுகையில், ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் போது குரல்வலைகளை நசுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். காவல்துறைக்கு இதுதான் வேலையா. கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் 6000 முதல் 7000 காவலர்களை பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் தடுக்கிறார்கள். இதனை தடுக்கட்டும் அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். அது 22ஆம் தேதி நடக்கலாம். வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது நடக்கும் போது எதை வேண்டுமானாலும் முற்றுகை செய்வோம்.
அது முதலமைச்சரின் வீடாக இருக்கலாம். டாஸ்மாக் அலுவலகமாக இருக்கலாம். எங்களை பொறுத்தவரை முதலமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவரும் குற்றவாளிதான். அவர் தப்பித்துப் போக முடியாது. அவரது அமைச்சரவை அவரது கண்காணிப்பில் இருக்கின்றது. ஒவ்வொரு அமைச்சருக்கும் அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை அடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
அடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு தேதி சொல்ல மாட்டேன். காவல்துறைக்கு மரியாதை கொடுத்து தேதி அறிவித்திருந்தோம். ஆனால் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் ஒரு அரசியல் கட்சியா நாங்களும் வேற ஸ்டைலில் செய்ய ஆரம்பிப்போம்.
கைது செய்யட்டும். அவர்களிடம் பயம் இருக்கிறது. நான் பேசக்கூடாது. நான் பேசினால் பல விஷயங்கள் வெளியே வரும். லோக்சபா தேர்தலையே மதுபான காசு வைத்து தான் நடத்திருக்கிறார்கள் . டாஸ்மார்க்கை பணத்தை வைத்து தான் 2024 இல் பாராளுமன்றத் தேர்தல் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலை நடத்தியிருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும் டாஸ்மார்க் காசை வைத்து தான் தேர்தலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன உத்தமரா. இந்தியாவிலேயே மிகவும் போலியான அமைச்சர் என்றால் அவர்தான். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்கிறார்கள் இன்று நீங்கள் அமைச்சராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்று கேட்கிறாங்க. இவர்களெல்லாம் காந்தியவாதி மாதிரி வேஷம் போடுகிறார்கள். இவர்கள் சொல்வதெல்லாம் இன்று சத்தியவாக்கு வேதவாக்காக எடுத்துக் கொண்டோம் என்றால், அப்பறம் சத்தியத்திற்கும் நேர்மைக்கும் என்ன நம்பிக்கை என்றார்.
சொல்லாமல் போராட்டம் நடத்துவோம் - அண்ணாமலை
தனது எக்ஸ் பக்கத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என பதிவிட்டுள்ளார்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}