ரெய்டெல்லாம் எதுக்கு .. எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினாலே கூட்டணி உருவாகிடுமே.. நயினார் நாகேந்திரன்

Jan 23, 2025,05:01 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்துவிடும். கூட்டணிக்காக ஐடி ரெய்டு மூலம் பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜகவின் சட்டசபைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.


கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது.  இதில் 2019 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அதுவும் அதிமுக மட்டுமே வென்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவி ஆட்சியையும் இழந்தது.  இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உடைந்தது. 


2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாகப் பிரிந்து தனித்தனியாக  போட்டியிட்டது. இதில் இரண்டு அணிகளுமே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் கடும் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் எப்போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி தீர்மானமாக அறிவித்திருந்தார். 




இருந்தாலும் கூட அதிமுக பாஜக இடையே மறைமுக கூட்டணி என அமைத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் காரசாரமாக விவாதித்து வருகிறனர். அதிமுக தரப்பி்ல ஜெயக்குமார்தான், கூட்டணி தொடர்பாக எப்போதுமே பதில் கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேர பாஜக தரப்பில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணியில் சேர விருப்பம் இருப்பதாக   தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலி சென்றபோது செய்தியாளர்கள் சீமானின் பெரியார் குறித்த விவாதங்கள், திருநெல்வேலியின் ஸ்மார்ட் சிட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா..? என பல்வேறு கேள்விகள் ரகேட்டனர். மேலும் ஐடி சோதனை மூலம் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி உருவாகிறதா..? என்ற கேள்விக்கு,  அவர் பதிலளிக்கையில், வருவான வரித்துறை சோதனை என்பது யார் வீட்டில் பணம் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தான் நடைபெறும். திமுக பக்கம் கூட சோதனை நடக்கிறது. ஏன் உங்கள் வீட்டில் பணம் இருந்தால் கூட உங்கள் வீட்டிலும் ரெய்டு வரும். ரெய்டு மூலமாக பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கும் கூட்டணி வற்புறுத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 


அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்து விடும். ஐடி சோதனை மூலம் பிற கட்சியை மிரட்டி கூட்டணி சேர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பதில் அளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்