சென்னை: பணத்துக்காக சொத்தை உருவாக்கிய அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நொந்து கொள்வதா? அல்லது சொத்துக்காக பணத்தை இழந்த பொது மக்களை நொந்து கொள்வதா? அரசியல்வாதிகளின் ஊழல் இது ஒரு தொடர்கதை .. இதற்கில்லை முடிவுரை என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மிச்சாங் புயல் பேய் மழையாக உருவெடுத்து, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அசுரத்தனமாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் ஒவ்வொரு ஏரியாவும் ஏரியாக மாறி நிற்கிறது. கடல் உள்ளே புகுந்து விட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
இந்த நிலையில் சென்னையின் அவல நிலை குறித்து நாராயணன் திருப்பதி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 50 வருடங்களில் சென்னை மற்றும் புறநகரில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் ஆறுகளை கூறு போட்டு விற்று விட்டனர் தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். நீர் போகும் பாதைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி பல்லாயிரம் கோடிகளை பெருக்கிக் கொண்டனர். சென்னைவாசிகளோ, சொந்த வீட்டு கனவில், அவை ஆக்கிரமிப்பில், நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிந்தும் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்து விட்டு பெருமழை பெய்யும் போது இன்னலுக்குள்ளாகும் போது அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் நொந்து கொள்வது காலம் கடந்த செயல்.
நீதிமன்றங்கள் நீர்நிலைகளை அகற்ற உத்தரவிடும் போது, கையூட்டு கொடுத்தாவது தங்களின் சொத்தை காப்பாற்றி கொள்ள அதே அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் சென்னை வாசிகள். இது ஒரு தொடர்கதை. இதற்கில்லை முடிவுரை.
நேற்றிலிருந்து பெய்து வரும் மழையினை எதிர்கொண்டு சமாளிப்பது மிக கடினமான காரியமே. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. கடந்த இரண்டரை வருடங்களில், சென்னையில், மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்க தோண்டிய சாலைகளை, தெருக்களை சீரமைக்காமல் பள்ளங்கள், குழிகளோடு கைவிடப்பட்ட சாலைகளால், தெருக்களால் தான் இன்றைய சீர்கேடு என்பதை அரசு உணர வேண்டும். மழைநீர் வடிகால்வாய்கள் பல தெருக்களில் சாலைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இனியாவது சென்னையில் சாலைகளை அமைக்க ஆவன செய்ய வேண்டும் அரசு என கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.
அவர் சொல்வதில் பாதி உண்மை உள்ளது. பல நீர் நிலைகளை ஆக்கிரமித்துத்தான் இன்றைய சென்னையின் பெரும் பகுதி உள்ளது. மக்கள் சரமாரியாக விவசாய நிலங்களை பிளாட் போட்டும், கால்வாய்களை ஆக்கிரமித்து வீடு கட்டியும் சென்னை நகரின் ஏரிகளிலிருந்து கடலுக்குச் செல்லும் நீரை மறித்து குழப்பி விட்டதால்தான் இன்று தண்ணீர் போக வழியில்லாமல் எல்லாம் வீட்டுக்குள்ளும், ரோட்டிலும் போய்க் கொண்டுள்ளன.
ஏரி ஆக்கிரமிப்பு, கால்வாய் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தியும், அபகரிக்கப்பட்ட கால்வாய்களையும் ஏரி போக்கு இடங்களையும் மீட்டு நீர் நிலைகளிலிருந்து உபரி நீர் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் சென்னையில் கொஞ்சமாச்சும் மக்கள் குடியிருக்க முடியும். இல்லாவிட்டால் ஊரைக் காலி செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}