சென்னை: தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என்று பாஜக மாநில தலைவர் மாற்றத்தை உறுதி செய்துள்ளார் அண்ணாமலை.
கடந்த 2024ம் ஆண்டு அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வந்தார். இந்த பேச்சு அதிமுகவினர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அதிமுகவினர் கூறி வந்தனர். இது குறித்து பாஜக தலைமை எதுவும் கூறாமல் இருந்த நிலையில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. இனி எப்போது பாஜகவுடன் கூட்டணி என்பதே கிடையாது என்று அதிமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக கூறி வந்தனர். பலமுறை கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சிற்கே இடம் இல்லை என்று தெரிவித்து வந்தது. அதேசமயம் பாஜகவுடன் அதிமுக இணைந்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் என டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 45 நிமிடங்கள் பேசிவிட்டு சென்னை திரும்பினார். எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பியதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்கிடையே பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இதனால் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட காரணமாக இருந்த மாநில தலைவரை நீக்கம் செய்து விட்டு பாஜக-அதிமுக கூட்டணியை தொடர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்தன. தற்போது உள்ள சூழலில் பாஜக தலைமை அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், தேர்தல் முடிந்த பின்னர் பாஜக தலைமை அண்ணாமலைக்கு உயர் பதவி வழங்கி அண்ணாமலைக்கு கீழ் அதிமுகவை செயல்பட வைக்க உள்ளதாகவும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை இல்லை. என்னை பொறுத்தவரை பாஜக கட்சி நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி, நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி. இந்த கட்சிக்காக ஏராளமானோர் உயிரைக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். தமிழக பாஜகவில் அனைவரும் சேர்ந்து ஒரு தலைவரை ஒருமனதாக தேர்வு செய்வோம். அதனால் போட்டி என்பது இருக்காது. என்னுடைய பணி தொண்டனாக தொடரும். 2026 சட்டமன்றத் தேர்தல் மக்களுக்கு மிகவும் முக்கியம். தொண்டனாக கட்சியின் பணிகளை செய்வோம். டெல்லிக்கு செல்லப் போவதில்லை. தமிழ்நாட்டில் தான் நான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாஜக மாநில தலைவர் மாற்றத்தை உறுதி செய்துள்ளார் அண்ணாமலை.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}