அமைச்சர் பதவி கேட்கும் கூட்டணி கட்சிகள்.. ஆனால் பாஜகவின் ஆஃபர் இதுதான்.. பரபரக்கும் டெல்லி!

Jun 07, 2024,01:53 PM IST

டெல்லி : மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள பாஜக.,விடம் கூட்டணி கட்சிகள் அனைத்துமே மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜக தலைமை மிகப் பெரிய நெருருக்கடியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


லோக்சபா தேர்தலில் 292 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்க போகிறது பாஜக. சிறிய கட்சிகள் சிலவும் பாஜக.,வுக்கு ஆதரவு அளித்துள்ளதால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 303 ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 09ம் தேதி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் 3000 முதல் 4000 பேர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 




புதிதாக உருவாக உள்ள மத்திய அமைச்சரவையில் முக்கிய துறைகளான உள்துறை, நிதி, ரயில்வே, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், சட்டம், வெளியுறவுத்துறை போன்ற துறைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் 16 எம்பி.,க்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் முக்கிய துறைகள் சிலவற்றை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.


தெலுங்கு தேசத்துக்கு எவ்வளவு?


இதுவரை வெளியான தகவல்களின் படி தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவி மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை ஒப்புக் கொள்ளதாம். இது தவிர மத சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் சில அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட உள்ளதாம்.


இந்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை தலைவராக கொண்ட லோக் ஜனசக்தி இணை அமைச்சர் பதவியையும். இந்துஸ்தான் அவாம் மோர்சா ஒரு மத்திய அமைச்சர் பதவியும் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  இவர்கள் இணை அமைச்சர் பதவிதான் கேட்கிறார்கள் என்பதால் அதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.


இப்போதைக்கு சிலருக்கு மட்டும் அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, பின்னர் சிறிது காலம் கழித்து மற்றவர்களுக்கும் அமைச்சர் பதவியைத் தர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


மத்திய புதிய அரசு ஆட்சி அமைப்பதற்காக லோக்சபா கட்சித் தலைவராக மோடியை தேர்வு செய்துள்ளது உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகள் ஒருபுறமும், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையிலும் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிப்பது பாஜக.,விற்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், இதை எளிதாக சமாளிக்கும் பார்முலாக்களை பாஜக கையில் எடுத்து வருவதால் அனைத்தும் சுமூகமாக முடியும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்