ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் 2024... புதிய யுக்தியுடன் மும்முரமாக தயாராகும் பாஜக!

Aug 05, 2024,08:50 AM IST

டில்லி : விரைவில் நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக தற்போதே வேகமாக தயாராக துவங்கி விட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 04) டில்லியில் நடந்துள்ளது.


ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையில் கமிஷனர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாது ஆகியோர் அடங்கிய குழு ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் 10ம் தேதி வரை காஷ்மீர் செல்ல உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பும் இந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் காஷ்மீர் சென்று விட்டு வந்தார்.




காஷ்மீர் மாநில தேர்தலை செப்டம்பர் 20ம் தேதிக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கின் தீர்ப்பை வழங்கும் போது தேர்தல் கமிஷனுக்கு இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்குள் காஷ்மீர் மாநில தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் கமிஷன் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதனால் 2024 காஷ்மீர் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் பாஜக நிர்வாகிகள், காஷ்மீர் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக கிஷன் ரெட்டி தான் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதில் காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்ட பிறகு காஷ்மீரில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதனால் தேர்தல் அறிக்கையை மிக கவனமாக தயாரிக்க மாவட்டத்திற்கு இருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசியல் கள நிலவரம், மக்கள் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆய்வு செய்து, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக அறிக்கை அளிக்கும் படி கட்சி தலைமை, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.


எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக சட்டப்பிரிவு 370 ஐ கையில் எடுத்து தான் பாஜக.,விற்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைப்பார்கள். அதனால் அதே சட்டப்பிரிவு 370 ல் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் என்னவெல்லாம் உள்ளது என்பதை பற்றிய தகவல் சேகரிக்க தான் இந்த கள ஆய்வு ஏற்பாடு நடத்தப்படுகிறதாம். இந்த அறிக்கைகளில் அடிப்படையில் தான் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தயார் செய்ய போகிறதாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்