விளவங்கோடு வேட்பாளர் நந்தினி...விஜயதாரணிக்கு சீட் கொடுக்க மறுத்த பாஜக

Mar 22, 2024,05:13 PM IST

சென்னை : விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நந்தினி என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்த விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சீட் அளிக்காமல் பாஜக மறுத்துள்ளது. 


தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் அதே வேளையில் அதே ஏப்ரல் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி பாஜகவில் வந்து இணைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




விஜயதாரணிக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலைமை இருந்து வந்தது.  இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  இதனால் விஜயதாரணி ஏமாற்றம் அடைந்தார். சரி, விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் விஜயதாரணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் நந்தினி என்பவரின் பெயர் இடம் பெற்றுள்ளது.


இதனால் லோக்சபா தொகுதியும் கிடைக்காமல், சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்காமல் விஜயதாரணி ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்? ஏன் பாஜகவில் வந்து இணைந்தார்? என்பதற்கே இதுவரை விடை தெரியாமல் இருந்து வருகிறது. இப்பொழுது லோக்சபா தேர்தலிலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை, சட்டசபை இடைத்தேர்தலும் சீட் கொடுக்கப்படவில்லை என்பதால் அவரது தரப்பு கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளது.


விஜயதாரணியின் கட்சி தாவலுக்கான நோக்கம் என்ன என்பதும் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது . விஜயதாரணி இனி என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்