3 வட கிழக்கு மாநிலங்களையும் மொத்தமாக அள்ளியது பாஜக.. மேகலாயாவில் திடீர் திருப்பம்!

Mar 03, 2023,10:59 AM IST
டெல்லி: திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக, மேகலாயாவில் சொற்ப இடங்களில் வெற்றி பெற்ற போதும் கூட பழைய கூட்டாளியான கான்ராட் சங்மாவுடன் மீண்டும் சேர்ந்து கொண்டு அங்கும் ஆட்சியைப் பிடித்துள்ளது.



மேகலாயா, திரிபுரா, நாகலாந்து ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கு பாஜக - ஐபிஎப்டி கூட்டணிக்கு மொத்தம் உள்ள 60 இடங்களில் 33 கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது.




இருப்பினும் கடந்த 2018  தேர்தலில் பாஜகவுக்கு இங்கு தனித்து 36 இடங்களில் வெற்றி கிடைத்திருந்தது. ஐடிபிஎப்டி கட்சிக்கு 8 இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால் இந்த முறை 11 இடங்கள் குறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களது இடங்களில் ஓட்டையைப் போட்ட பெருமை பிரத்யுத் கிஷோர் தெப்பர்மாவின் திப்ரா மோத்தா கட்சியையே சேரும். இந்தக் கட்சிக்கு 13 இடங்கள் கிடைத்துள்ளன. முதல் முறையாக தேர்தலை சந்தித்த கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேகலாயா

மேகாலயா மாநிலத்தில் தற்போதைய முதல்வரான கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி - பாஜக கூட்டணிதான் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை பாஜக அங்கு தனித்துப் போட்டியிட்டது.  மொத்தம் உள்ள 60 இடங்களில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், பாஜக தேசிய மக்கள் கட்சிக்கு மொத்தமாக 28 இடங்கள் கிடைத்துள்ளன.

இதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானிக்கப்பட்டது.இதுதொடர்பாக சங்மா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார். பாஜகவின் ஆதரவும் உடனடியாக கிடைத்ததால் தற்போது  மேகலாயாவிலும் பாஜக கூட்டணி ஆட்சியே அமையவுள்ளது.

மீண்டும் பாஜக - சங்மா கூட்டணி அமைய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ்தான் காரணம். அவர் நேற்றே சங்மாவுடன் குவஹாத்தியில் ரகசிய ஆலோசனை நடத்தி பேசி முடித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். மேகலாயாவில் இடதுசாரி கட்சிகளுக்கும், காங்கிரஸுக்கும் கூட்டாக 14 இடங்கள் கிடைத்துள்ளன.  திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்துள்ளன.

நாகாலாந்தைப் பொறுத்தவரை பாஜகவும் அவர்களது கூட்டாளியான தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கும் மொத்தமாக 37 இடங்கள் கிடைத்துள்ளன. இது கடந்த முறையை விட 7 இடங்கள் கூடுதலாகும். நாகாலாந்தில் முதல் முறையாக ஒரு பெண் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது இந்த தேர்தலின் சிறப்பம்சமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்