"பாமகவுக்கு 10".. பாஜகவுடன் ஒப்பந்தம் கையெழுத்து.. சேலம் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பு

Mar 19, 2024,05:31 PM IST

சென்னை:  பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


தமிழ்நாட்டில் திமுக கூட்டணியைத் தொடர்ந்து தற்போது பாஜக கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு விறுவிறுப்பாக முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியில் பெரிய, வாக்கு வங்கியுடன் கூடிய கட்சி எதுவும் இடம் பெறாமல் இருந்தது. அந்தக் குறையை தற்போது பாமக தீர்த்து வைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவை விட வாக்கு வங்கி பலமாக உள்ள கட்சி பாமக என்பது குறிப்பிடத்தக்கது.


2021 சட்டசபைத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணியாகப் போட்டியிட்டன. அப்போது பாமகவுக்கு 3.80 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 2.62 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பாமகவுக்கு 5 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களும் கிடைத்தனர். ஆனால் இந்த இரண்டு பேருக்குமே அப்போது பலமாக அமைந்தது கூட்டணிக்குத் தலைமை தாங்கிய அதிமுகதான் என்பதை மறந்து விடக் கூடாது.




2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக - பாமக இணைந்து போட்டியிட்டன. இந்தக் கூட்டணிக்கும் அப்போது தலைமை தாங்கியது அதிமுகதான். பாமகவுக்கு இந்தத் தேர்தலில் 5.36 சதவீத வாக்குகள் கிடைத்தன. ப பாஜகவுக்கு 3.66 சதவீத வாக்குகள் பதிவாகின. இரு கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்கவில்லை. அதிமுக மட்டும் ஒரு தொகுதியில் வென்றது.


நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக பெரும் ஊசலாட்டத்தில் இருந்து வந்தது பாமக. அதிமுக தரப்புடனும் பேசி வந்தது, பாஜகவுடனும் பேசிக் கொண்டிருந்தது. கடைசியில் பாஜக பக்கம் சாய்ந்துள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை, பாமகவுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


2019 தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக இந்த முறை 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதிகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படுமாம். சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளதால் தொகுதி எண்ணிக்கை மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு தொகுதிகள் விவரம் வெளியாகும்.




சேலத்தில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் பங்கேற்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


பாஜகவில் கிட்டத்தட்ட கூட்டணிப் பங்கீடு முடிவுக்கு வந்திருப்பதாகவே கருதப்படுகிறது. இன்றைய சேலம் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையேறி பிரதமருடன் கை கோர்த்து காட்சி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த பாஜகவும் தீவிரமாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!

news

CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!

news

A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்