இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

Apr 03, 2025,06:29 PM IST

சென்னை: இறுதிக்கட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழகம் வரும் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


கடந்த தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாஜக -அதிமுக இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இனிமேல் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் இல்லை என்று அதிமுக தரப்பினர் திட்டவட்டமாக கூறி வந்தனர். 2026 தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பே இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.


இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்த வித அறிவிப்பும் இன்றி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், முக்கியமான  நபர் யாரையும் பார்க்க வரவில்லை. டெல்லியில் திறக்கப்பட்டுள்ள எங்களது கட்சி அலுவலகத்தை பா, பாஜகர்வையிடவே வந்துள்ளேன் என்று கூறினார். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் சென்னையில் இருந்து டெல்லிக்கு பயணம் சென்றனர்.  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணையவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் பரபரப்பு நிலவியது.




அந்த பரபரப்பிற்கு ஏற்றார் போல அதிமுக பொதுச்செயலாளர் அன்றே  3 கார்களில் மாறிச்சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சு வார்த்தையும் நடத்தினார். இந்நிலையில்,டெல்லியில் இருந்து சென்னை வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம். கல்வி நிதி, இரு மொழிக் கொள்கை விவகாரம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கோரிக்கை வைத்தோம். அதே போல் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாகவும் பேசியுள்ளோம். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.


ஆனால், கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமித்ஷாவே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதனால் தமிழ்நாட்டில் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 6ம் தேதி விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து அவர் புதிய பாம்பன் ரயில் பாலத் திறப்பு விழாவுக்குச் செல்லவுள்ளார். மதுரை வரும் பிரதமர் மோடியை வழக்கம் போல  பாஜக தலைவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் விமான நிலையத்தில் சந்திக்கவுள்ளனர். அதனைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனத்தனியாக மதுரை விமான நிலையத்தில் பிரதமரை சந்திக்க உள்ளனர். அதற்காக பிரதமர் நேரம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அதிமுக-பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்