வெயிலில் வறுபடும் வட இந்தியா.. அதீத வெப்பத்தால் மயங்கி விழுந்த மாணவிகள்.. எங்கு தெரியுமா?

May 29, 2024,06:03 PM IST

பாட்னா: பீகாரில் கடும் வெப்ப அலை வீசிவருவதால் பள்ளி சென்ற மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாட்டி வதைத்த வெப்பம், தற்போது இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையாக உள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெப்பத்தினால் மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




டெல்லியில் கடும் வெயில் வெளுத்து வருகிறது. அங்கெல்லாம் 120 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்திக் கொண்டுள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை இறை வணக்க கூட்டம் நடந்தது. இந்த நிகழ்விற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர். அப்போது காலை வேலையிலேயே வெயில் அதிகம் அடித்ததால், இறைவணக்கம் செய்து கொண்டிருந்த 7 மாணவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தனர். இதனால் அங்கு சற்று நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.


மயங்கி விழுந்த மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர்  7 பேரும் ஷேக்புராவில் உள்ள சதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்டர் கூறுகையில், வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்