பீகார் மக்கள் தொகையில் 63.1% பிற்படுத்தப்பட்டோர்.. அதிரடி சர்வே முடிவுகள்!

Oct 02, 2023,05:15 PM IST

பாட்னா:  பீகார் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அசத்தியுள்ளது பீகார் மாநில அரசு.


இந்த கணக்கெடுப்பு விவரப்பட, பீகார் மாநில மக்கள் தொகை எண்ணிக்கை 13.1 கொடியாகும். இதில் மொத்தமாக 63.1 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36% + பிற்படுத்தப்பட்டவர்கள் 27.1%). 




தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 19.7 சதவீதம். பழங்குடியினர் எண்ணிக்கை 1.7 சதவீதம். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 15.5 சதவீதம் பேர் ஆவர்.


பீகார் மாநிலத்திலேயே மிகப் பெரிய ஜாதியாக யாதவர் சமுதாயம் உருவெடுத்துள்ளது. இந்த சமுதாயத்தினர் எண்ணிக்கை 14.27 சதவீதமாகும். லாலு பிரசாத் யாதவ் இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். 


இந்த சர்வேயானது பீகார் மாநில அரசியலில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வேப்படி பார்த்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63.1 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடானது வெறும் 27 சதவீதம்தான். அதேசமயம் பொதுப் பிரிவைச் சேர்ந்த பொருளாதார ரீதியில் நலிவடைந்த சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது நியாயமற்றது. எனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியுள்ளது.


விரைவில் இந்த சர்வே குறித்து விவாதிக்க பீகார் சட்டசபைக் கட்சிகள் கூட்டம் கூட்டப்படும். பீகார் சட்டசபையில் 9 கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது. இந்தக் கட்சிகளின் தலைவர்கள்  அழைக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்று மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் எந்த மாநிலமும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தியதில்லை. அந்த வரிசையில் பீகார் மாநில அரசு வரலாறு படைத்து விட்டது. இந்தியா முழுவதுமே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி சரிவர அதை அமல்படுத்த முடியும் என்ற கோரிக்கையை பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Special Story: இப்பெல்லாம் யாருங்க துணி எடுத்து தைக்கிறாங்க.. நலிவடையும் சிறு டெய்லர்கள்!

news

உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. எல். முருகன் கேள்வி

news

மீண்டும் சர்ச்சை.. 3 முறை பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. விளக்கமளித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின

news

மதுரையில் இன்றும் இடி மின்னலுடன் வெளுத்தடுத்த கன மழை.. பகலே இருளாய் மாறிய அதிசயம்!

news

TVK Flag: 5 வருடத்திற்கு பட்டொளி வீசிப் பறக்கப் போகும்.. விக்கிரவாண்டியில் ஏற்றப்படும் தவெக கொடி!

news

எங்களுக்கு டைமெல்லாம் கிடையாது.. உணர்வுப்பூர்வமா வேலை பண்றோம்.. தவெக நிர்வாகிகள் அசத்தல்!

news

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.. விஜய் கட்சியின் கட் அவுட்கள் ஒரு நல்ல தொடக்கம்.. செல்வப்பெருந்தகை

news

வி. சாலை எல்லையில்.. இரு கைகளையும் விரித்தபடி.. இதய வாசல் திறந்து வைத்து காத்திருப்பேன்.. விஜய்

news

Sprituality: வீட்டில் செல்வம் சேர.. விளக்கேற்றி வழிபடும்போது.. தவறாமல் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்