30 விஷம வீடியோக்கள்.. வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து திட்டமிட்டு அவதூறு.. ஒருவர் கைது

Mar 07, 2023,12:28 PM IST

பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பிய பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை இந்த நபர் பதிவு செய்ததாக பீகார் போலீஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் ஜமுயி என்ற மாவட்டத்தில் வைத்து இந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் நான்கு பேரை போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற மூன்று பேர் ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத் மற்றும் மனீஷ் காஷ்யப் என்று தெரிய வந்துள்ளது. அமன்குமார், ஜமுயி மாவட்டத்தில் உள்ள லக்ஷமிபூர் என்ற பகுதியைச் சேர்ந்தவன். மற்ற 3 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.





இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பியுள்ளது. கிட்டத்தட்ட 30 அவதூறான, தவறான வீடியோக்களை இந்தக் கும்பல் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றம்  செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் தொழிலாளர்கள் பீதி அடைந்து வெளியேற வேண்டும் என்பதே இவர்களது திட்டமாகும்.


இதற்கிடையே, இது போல திட்டமிட்டு பரப்பப்பட்ட 42 வீடியோக்களை நீக்குமாறு யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், ஜிமெயில் நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதில் பேஸ்புக்கில் 9 வீடியோக்கள், டிவிட்டர் யூடியூபில் தலா 15, ஜிமெயில் மூலம் 3 வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன.


சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்