மீண்டும் பல்டி அடிக்கிறார் நிதீஷ்குமார்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய முடிவு!

Jan 26, 2024,09:51 PM IST

பாட்னா: நிதீஷ் குமாருக்கு இதே வேலையாப் போச்சு என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது அரசியல் முடிவுகள் அடிக்கடி தடம் மாறி வருகின்றன. அடிக்கடி கூட்டணி மாறி வரும் அவர் இப்போது மீண்டும் ஒரு முறை கூட்டணியை மாற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டாராம். பாஜகவுடன் மட்டும் இதுவரை அவர் நான்கு முறை மாறி மாறி கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பாஜகவுடன் இணைந்து  கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தார் நிதீஷ் குமார். பின்னர் அதிரடியாக அந்தக் கூட்டணியை விட்டு விலகினார். லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருடன் அணி சேர்ந்து புதிய கூட்டணியை அமைத்தார்.


இந்தக் கூட்டணியில்தான் தற்போது நீடித்து வருகிறார். இடையில் இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியபோது அதன் முதல் கூட்டம் பாட்னாவில்தான் நடந்தது. நிதீஷ்குமார்தான் முன்னின்று எல்லாவற்றையும் நடத்தினார். இந்த நிலையில் அக்கூட்டணியின் தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்திருந்ததாகவும், பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.




இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவிக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதீஷ் குமாருக்கு அளிக்க அனைத்துக் கட்சிகளும் விரும்பின. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். இந்த சம்பவத்துக்குப் பின்னர் அவர் இந்தியா தலைவர்களுடன் பேசுவதையும் கூட நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அணி மாற நிதீஷ் குமார் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாலு பிரசாத் உள்ளிட்டோருடனான உறவை முறித்துக் கொண்டு விட்டு, பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சியில் தொடர நிதீஷ்குமார் முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். அனேகமாக அவர் ஞாயிற்றுக்கிழமை பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியமைப்பார் என்று சொல்லப்படுகிறது. அன்றைய தினம் அவர் திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டார்.


நாளை பதவியை ராஜிநாமா செய்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவர் பதவியேற்கலாம் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இன்னும் 2 நாட்களில் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியேற்கும் என்று பாஜக எம்எல்ஏ ஞானேந்திர சிங் என்பவர் கூறியுள்ளார்.


பாஜக ஆதரவுடன் முதல்வரான பிறகு அக்கட்சிக்கு 2 துணை முதல்வர் பதவிகளை அளிக்க நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். நிதீஷ் குமாரின் இந்த திடீர் முடிவால் பீகாரில், இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


கொள்கை பிடிப்பாளராக கருதப்படும், நிதீஷ் குமார் இப்படி அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொள்வதும், முரண்பாடுகள் நிரம்பியவர்களுடன் அடிக்கடி போய் ஒட்டிக் கொள்வதும் ஆச்சரியத்தை மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா அணிக்கு நெருக்கடி


இந்தியா கூட்டணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் மமதா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடுவோம், காங்கிரஸுடன் பேச மாட்டோம், கூட்டணியும் தேவையில்லை என்று அறிவித்தார். 


அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும், யாருடய கூட்டணியும் தேவையில்லை என்று அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தற்போது நிதீஷ் குமார் கூட்டணியை விட்டே விலகப் போகிறார்.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒருபக்கம் பாதயாத்திரை மேற்கொண்டு மக்கள் ஆதரவை ராகுல் காந்தி திரட்டி வரும் நிலையில், மறுபக்கம் கூட்டணிக் கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக செல்வது இந்தியா கூட்டணித் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்