Bigg Boss Tamil 7.. கோலாகலமாக இன்று ஆரம்பம்.. ரசிப்பதிலிருந்து.. யாரும் தப்ப முடியாது!

Oct 01, 2023,09:18 AM IST

சென்னை: டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இன்று கோலாகலமாக தொடங்குகிறது.


சின்னத் திரை ரசிகர்களைக் கட்டிப் போட்ட நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்கு தனி இடம் உண்டு. விஜய் டிவியில் வருடா வருடம் வரும் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து அளிக்கிறார். முதல் ரியாலிட்டி ஷோ முதல் கடந்த 6 வருட காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.


இந்த நிலையில், பிக் பாஸ் ஏழாவது சீசன் இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பிக் பாஸ் என்றாலே ஆ என்று வாயை பிளந்து வைத்துக்கொண்டு பார்க்கும் அளவிற்கு இந்நிகழ்ச்சி பிரபலம். அடுத்த வீட்டுக்குள் ஏதாவது நடந்தால் பலருக்கும் அது பொழுது போக்காகவே இருக்கிறது.. என்ற அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியே வெற்றி அடைந்தது.




இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏகேபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 7 சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதனை உலக நாயகன் கலஹாசன் தொகுத்து வழங்குகிறார். 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற உள்ளது. ரசிகர்கள் மத்தியில் 3 மாதத்திற்கும் இந்த பிக்பாஸ் 7 சீசன் குறித்த பீவர் இருக்க தான் செய்யும். 

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில்,
பிரபல நடிகர் பப்ளு எனும் பிருத்விராஜ், பாரதி கண்ணம்மா ரோஷினி, குக்கு வித் கோமாளி புகழ் ரவீனா தாஹா, தர்ஷா குப்தா, ரச்சித்தாவின் கணவர் தினேஷ் , விஜய் டிவி தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடு என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை வைத்து ஏகப்பட்ட புரோமோக்களையும் போட்டுள்ளனர். எனவே எதிர்பார்ப்பு பலமாகவே இருக்கிறது.

சும்மாவே வீடு ரெண்டாகும்.. இப்போ வீடே இரண்டாக இருப்பதால், கலாட்டாக்களுக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம். கடந்த 6 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 7வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். ஆனால், இந்தி பிக் பாஸ் இதுவரை 16 சீசன்களை கடந்த தற்போது 17வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தி  இந்நிகழ்ச்சியை சல்மான் தொகுத்து வழங்குகிறார் என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே மக்களே, ரெடியாகுங்க.. ஜாலியா 3 மாசம் பொறணி பேசி பொழுதைக் கழிக்கலாம்.. பிக்பாஸ் countdown starts!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்